கதை திருட்டுகள் அதிக அளவில் நடக்கிறது…டைரக்டர் பாக்கியராஜ் கவலை.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

இப்ராகிம் ராவுத்தர் அவர்களின் ” ராவுத்தர் மூவீஸ் ” நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு புதிய படம் ஒன்றை தயாரித்தது. அதில் நெடுஞ்சாலை படம் மூலம் அறிமுகமாகிய ஆரியும், ஷாஷ்வி பாலா வும் கதாநாயகன்,கதாநாயகியாக தேர்ந்தெடுத்து ” எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான் ” என்ற படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை கவிராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் பாக்கியராஜ் கூறியதாவது.

ஏலியனை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டுள்ளது. தமிழ்சினிமாவில் ” ஏலியன் கதாப்பாத்திரம் ” கொண்ட முதல் படம் இதுதான். எல்லாம் மேல இருக்கவன் பாத்துப்பான் என்று கடவுளை நம்பி மட்டுமே இருக்க முடியாது, இவ்வுலகை கடவுள் படைத்தார் என்றல், கெட்டவர்களை என் படைத்தார் என்ற கேள்வியும் எழுகிறது. பொதுவாக பேய் இருக்கு என்று சொல்லுவார்கள் அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இப்போதெல்லாம் சினிமாவில் அதிகமாக கதை திருட்டு நடப்பதாக அதிகப்படியான புகார்கள் வந்துகொண்டிருக்கிறது.

Celebrities At The ‘Ellam Mela Irukuravan Pathupan’ Audio Launch

பொதுவான விஷயங்களில் ஒரே மாதிரியான கதைகளில் படங்கள் எடுக்கலாம் , சந்தன கடத்தல் வீரப்பனின் கதையை வைத்து கூட படம் எடுக்கலாம். ஆனால் ஒரு கதையை அப்படியே காப்பி அடித்து படம் எடுப்பது மிகவும் தவறு. குளோனிங் பற்றி நான் ஒரு கதை எழுதி வைத்திருந்தேன், ஆனால் 1 வருடம் கழித்து அதே மாதிரியான ஒரு படம் வந்ததால், நான் எழுதிய கதையை வைத்து படம் எடுக்க வில்லை என்கிறார். இவ்விழாவில் டைரக்டர் உதயகுமார், அமீர், இசையமைப்பாளர் கார்த்திக், ஒளிப்பதிவாளர் லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
READ  உலகின் மிகச்சிறந்த 100 இடங்களில், இந்தியாவின் முக்கியமான இடம் தேர்வாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here