மோடியின் கைகால்களை வெட்டுவேன் என்று சொல்லிய நாம் தமிழர் தொண்டருக்கு நேர்ந்த சோகம் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சமூகவலைத்தளம்.,

கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூகவலைத்தளமான facebook -ல் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சார்லஸ் என்ற நபர் பிரதமர் மோடியின் கை கால்களை வெட்டுவேன் என்று பதிவிட்டிருந்தார். மேலும் நான் எவனுக்கும் அஞ்சாத நாம் தமிழர் கட்சியின் ராணுவ வீரன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவானது பாஜக தொண்டர்கள் இடையே பெரும் கோபத்தை உண்டு பண்ணியது, இந்த நபரின் பின்னணியை ஆராய்ந்ததில் அவர் திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பாஜகவினர் அவரை தொடர்பு கொண்டு பேசியதில் நபர் வெடவெடுத்து போய் விட்டாராம்.

Loading...
READ  நான் நாம்தமிழர் கட்சியின் ராணுவ வீரன் மோடியை வெட்டுவேன் என்று சொல்லிவிட்டு போலீஸ் வந்ததும் அழுவதை பாருங்கள் ! சிறப்பாக செயல்பட்ட மாவட்ட துணை தலைவருக்கு குவியும் பாராட்டு !

தெரியாமல் ஆர்வக்கோளாறில் தவறு செய்துவிட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியதுடன் தன்னை நாம் தமிழர் கட்சியின் ராணுவ வீரன் என்று சொன்ன சார்லஸ் தேமி அழுதிருக்கிறார். மேலும் தனது முகநூலில் பதிவிட்ட அனைத்து புகை படங்களையும் நீக்கியது மட்டுமல்லாமல் கிறிஸ்துவரான சார்லஸ் இந்து கடவுள்களின் படத்தையும் தனது முக நூலில் பதிவிட்டுள்ளார்.

தன்னை சமூக வலைத்தளத்தில் கட்சியின் ராணுவ வீரன் என்றவர் பாஜகவினர் நேரே சென்றதில் அழுது கதறியிருப்பது இணையத்தில் பலத்த கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. தற்போது சார்லஸ் மீது அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் Cr. No 228/2019 u/s 504, 506 (ii) IPC and 67 IT Act இந்த பிரிவுகளின் கீழ்
வழக்கு பதிவு தொடுக்க பட்டுள்ளது.

READ  யாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் ! விஜய்க்கு இரட்டை பிகில் அடிக்கும் பாஜகவினர் !

இதனால் விரைவில் சார்லஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது. இதற்கு முன்னர் பெரியாரிஸ்ட் அமுதன் என்பவர் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்பவர்களை அடிப்போம் என்று கூறி தற்போது சிறையில் கம்பி எண்ணிவருவது குறிப்பிடத்தக்கது.

சமூகவலைத்தளத்தில் தங்களை புலியாக காட்டிக்கொள்ளும் நாம் தமிழர் கட்சியினர் நேரில் சென்றதும் கதறி அழுவது தொடர்கதையாகியுள்ளது.

©TNNEWS24

எங்களது செய்திகளை உங்களது வாட்சாப் எண்ணில் உடனுக்குடன் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here