ஒற்றை தலைவலி எதனால் ஏற்படுகிறது சரிசெய்வது எப்படி?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

ஒற்றை தலைவலி எதனால் ஏற்படுகிறது சரிசெய்வது எப்படி?

மாசு நிறைந்த வாழ்விடம் , பணிச்சுமை  போன்ற சூழல்கள் நமக்கு எளிதில் நோயைத் தரக் கூடியவைகளாக மாட்டிவிடுகின்றன . அதிலும் இன்று பலரையும் ஆட்டிப்படைக்கும் ஒரு நோய் உள்ளதென்றால் அது தலைவலி.

தலைவலியில் ஒற்றை தலைவலி மக்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்குகிறது, மூளையில் ரத்த ஓட்டம் சீராக இல்லாதபோது தலைவலி ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் . சைனஸ் போன்ற உடல் உபாதை உள்ளவர்களுக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வரும் என்கிறது ஆய்வு . பொதுவாக சில உணவுகள் ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அதேசமயம் ஒற்றைத் தலைவலியைப் போக்கவும் சில உணவுகள் உள்ளன.

READ  இதை செய்யுங்கள் இனி அம்மை தழும்பு முகப்பரு இருக்கவே இருக்காது !

ஒற்றைத் தலைவலியை தூண்டும் சில உணவுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தயிர், வாழைப்பழம், சாக்லேட், வெண்ணெய்,  , தக்காளி போன்ற உணவுகள் ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் குணமுடையவை என்றும் . அதற்காக இந்த உணவுகள் சாப்பிட்டால் தலைவலி வரும் என்பதில்லை. ஏற்கெனவே இந்த ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்களில் சிலருக்கு இந்த உணவுகள், தலைவலியை அதிகரிக்கச் செய்யும். எனவே, ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் பெரும்பாலும் இந்த உணவு வகைகளைத் தவிர்ப்பது அல்லது குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது என்கின்ற கருத்தையும் எடுத்துக்கொள்ளலாம்.

தலைவலியில் இருந்து விடுபட உதவும் சில உணவுகள்

அதிக நேரம் சாப்பிடாமல் இருக்கும் போது நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு தேவையான அளவிற்கு கீழ் குறைந்து விடும் . மூளை நரம்புகளும் சோர்வடைந்து விடும். இதனால் தலைவலி ஏற்படும் . உங்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது என்றால் முதலில் உங்களது உணவுப் பழக்கத்தை நிச்சயம் சீர்படுத்த வேண்டும். சரியான நேரத்திற்கு, சரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது தலைவலியை தாண்டி பல வியாதிகளுக்கு தீர்வாக அமைகிறது.

READ  இனி அத்திப்பழம் வேண்டாம் என்று சொல்வீர்களா?

நமது மூளை சுறுசுறுப்பாக இயங்க இரண்டு காரணிகள் நிச்சயம் தேவை . ஒன்று ஆக்சிஜன். மற்றொன்று நாம் உண்ணும் உணவு செரிமானமாகி அதிலிருந்து கிடைக்கும் சத்து . இந்த இரண்டில் எதாவது ஒன்று மூளைக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்படும்போது தலைவலி உண்டாகிறது.

©TNNEWS24

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here