பேசி ஒருமணி நேரம் ஆகவில்லை இப்படி ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு அசிங்கப்படுத்திட்டாரே ரவீந்திரநாத்.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

டெல்லி.,

மாநிலங்களவையில் நேற்று காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிப்பு உள்ளிட்ட விவாதங்கள் அதிரடியாக நடைபெற்று வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று மக்களவையில் காஷ்மீர் விவகாரம் குறித்த மசோதாவினை உள்துறை அமைச்சர் அமிட்ஷா தாக்கல் செய்தார்.

திமுக சார்பில் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய திமுக மாநிலங்களவை குழு தலைவர் டி ஆர் பாலு மிகவும் காரசாரமாக பேசினார், நாட்டின் பெரும்பான்மை இருந்தால் எதையும் சாதித்து விடும் என்று பாஜக ஜனநாயக விரோத போக்கில் செயல்படுகிறது, மாட்டினை வண்டியின் முன்பு கட்டுவதற்கு பதிலாக, வண்டியை மாட்டின் முன்பு காட்டுவதாகவும் இது தவறான செயல் என்றும்,

Loading...
READ  சவுக்கால் அடித்தது போன்று கேள்வி கேட்ட ராணுவ வீரர் ! இனியாவது தலித் என்று பொய் சொல்லாமல் இருப்பாரா ஷா நவாஸ்?

பாஜகவிற்கு தென் மாநிலங்களில் செல்வாக்கு இல்லை கேரளா, தமிழக மாநிலங்கள் உங்கள் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்றும் ஒ பி ரவீந்திரநாத்தை பார்த்து முதுகெலும்பு உள்ளவர்கள் எதிர்ப்பார்கள் என்று பேசியதுடன் அவரை கிண்டல் செய்யும் விதமாக சைகை செய்தார் இதனை ரவீந்திரநாத் கண்டித்த போது, எழுந்த நிலையில் கனிமொழி குறுக்கிட்டு எப்படி ரவீந்திரநாத் எதிர்ப்பு தெரிவித்து எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பேசலாம் உட்கார சொல்லுங்கள் என்று டி ஆர் பாலுவிற்கு ஆதரவாக எழுந்து நின்றார்.

இதற்கு தற்போது ஒ பி ரவீந்திரநாத் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார், இந்தியாவின் மீது நம்பிக்கை அற்ற முதுகெலும்பு அற்ற சிலர் இந்தியாவின் நடைமுறையை எதிர்க்கின்றனர், எங்கள் அம்மா, காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் கொள்கையை எப்போதும் ஆதரித்து வந்திருக்கிறார், ஒரு படி மேலே சென்று மாநிலங்கள் அவையில் மிகப்பெரிய விவாதமும் செய்திருக்கிறார்.

READ  20 இஸ்லாமிய நாடுகளில் முத்தலாக் சட்டம் தடை செய்யப்பட்டிருக்கிறது...இந்தியாவில் தடை செய்தால் மட்டும் போராட்டமா...அமிட்ஷா கேள்வி

அதன் வழியில் நாங்கள் ஆதரிக்கிறோம், ஆனால் தமிழகத்திற்கு சொந்தமான கட்ச தீவை இலங்கைக்கு தாரைவார்த்த போது இந்த முதுகெலும்பு உள்ள இருவரும் இவர்களது தலைவரும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ஒரு வேலை 2G யில் எப்படி கொள்ளை அடிப்பது என்று அப்போதே குடும்பத்துடன் திட்டமிட்டு இருந்தீர்களா என்று கேள்வி எழுப்பியதுடன், இந்தியாவிலேயே ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அந்த பெருமை இவர்களை தான் சேரும் என்று வகையாக வச்சு செய்துள்ளார்.

இதன்மூலம் திமுக உறுப்பினர்கள் பாலுவும், கனிமொழியும் அவைக்கு புதியவரான ஒ பி ரவீந்திரநாத்திடம் கிண்டல் செய்ய போயி தற்போது வகையாக வாங்கி கட்டிக்கொண்டுள்ளனர்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரும் இதுகுறித்து பதிலடி கொடுத்துள்ளார்.

©TNNEWS24

READ  அடடா இதெல்லவோ பங்காரு வீட்டு எளிமையான திருமணம் ! செலவுகள் எத்தனை கோடி தெரியுமா? அதில் அந்த முழு கோழி இருக்கே !

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here