முதல் உரையிலேயே ஜெயலதாவின் புகழை உறுதி செய்த OPR ! தனி ஒருவனாய் 37 எம் பி -களுக்கு முதல் உரையிலேயே ஆப்பு கவனித்தீர்களா?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

முதல் உரையிலேயே ஜெயலதாவின் புகழை உறுதி செய்த OPR ! தனி ஒருவனாய் 37 எம் பி -களுக்கு முதல் உரையிலேயே ஆப்பு கவனித்தீர்களா?

டெல்லி.,

தமிழகத்தை சேர்ந்த 38 பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்று தமிழில் பதவிஏற்றுக்கொண்டனர். தமிழில் பதவியேற்ற திமுக எம் பி -கள் அதனை சாதனையாக மக்கள் மத்தியில் எடுத்து சென்றனர். ஆனால் இத்தனை வருடம் அரசியலில் இருந்த திமுக உறுப்பினர்கள் இப்போதுதான் தமிழில் புதிதாக பதவி ஏற்கிறார்களா என்று நெட்டிசன்கள் கடுமையான விமர்சனத்தை வைக்க தற்போது அதனை கைவிட்டுவிட்டனர்.

இருப்பினும் அதிமுக சார்பில் தனி ஒருவனாக டெல்லி சென்றுள்ள ஓ பி ரவீந்திரநாத் ஒற்றை நபராக 37 எம் பி-களுக்கு கிடைக்காத ஊடக வெளிச்சத்தை பெற்றிருக்கிறார். இன்று மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லாவை மோடி சபாநாயகர் இருக்கையில் அமர செய்தபோது அதில் ஓ.பி.ரவீந்திரநாத்தும் உடன் சென்று அதிமுக சார்பில் சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அதன் பிறகு சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவிக்கும் உரையில் தான் ஜெயலலிதாவிடம் அரசியல் கற்றவர் என்பதை நிரூபணம் செய்துவிட்டார் குறிப்பாக ரவீந்திரநாத்தின் உரையை மோடி சிரித்த முகத்துடன் கேட்டு கொண்டிருந்தது அவையில் பலரையும் ஆச்சர்யமடைய செய்துள்ளது.

READ  உள்ளாட்சி தேர்தலில் மோடி எதிர்ப்பை சொல்லி ஓட்டு கேட்டால் பொதுமக்கள் விரட்டி அடிப்பார்கள் புது திட்டம் தீட்டிய திமுக !

தன் முதல் உரையை ஜெயலலிதாவை நினைவு கூறி தொடங்கிய ரவீந்திரநாத் மக்களவையில் ஏழை மக்கள் தொடர்பான விவாதங்களை அதிகம் நடத்தவேண்டும் என்று முதல் கோரிக்கையாக வலியுறுத்தினார்.

அடுத்ததாக பிரதமர் மோடி அவர்கள் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பார் என்று நம்புவதாகவும் தெரிவித்தார் இதன் மூலம் தமிழகத்தின் சார்பில் முதல் உரையிலேயே தனது எண்ணத்தை பிரதமரிடம் வெளிப்படுத்தியுள்ளார் ரவீந்திரநாத்.

எல்லாவற்றிற்கும் மேலாக எப்போதும் சபாநாயகர் அறிமுக உரையில் அதிமுக சார்பில் ஜெயலலிதா இருந்தபோது என்ன மாதிரியான கோரிக்கைகளை முன்வைப்பாரோ அதனை அப்படியே பின்பற்றி ரவீந்திரநாத் பேசியிருப்பது அதிமுக தொண்டர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

நேற்றைய ரவீந்திரநாத்தின் வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் கோசத்திற்கு பாஜக தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

READ  ஒரே ஒப்பந்தத்தில் சோழிய முடிச்சுட்டாரே மோடி கதறும் திருமுருகன் காந்தி ! இனி எல்லாம் சென்னைதான் !

என்னதான் திமுக கூட்டணிக்கு 37 எம் பி-கள் இருந்தாலும் அதிமுகவின் ரவீந்திரநாத்திற்கு கிடைக்கும் ஊடக வெளிச்சம் மற்றும் முக்கியத்துவம் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை.

©TNNEWS24

செய்திகளை உங்களது வாட்ஸாப் எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று மெசேஜ் அனுப்பவும்.

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here