காலம் மாறி போச்சு நாம் முதலில் இந்து அப்புறம்தான் கெத்துக்காட்டும் ரவீந்திரநாத் முழு பேச்சின் வீடியோ இணைப்பு

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

நாம் முதலில் இந்து அப்புறம்தான் கெத்துக்காட்டும் ரவீந்திரநாத்தின் பேச்சு ! கதறும் பெரியாரிஸ்ட்கள் முழு வீடியோ இணைப்பு

தேனி

தேனி மாவட் டத்தில் கடந்த இரண்டு நாள் களாக விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதன் நீட்சியாக சின்னமனூர் பகுதியில் இந்து முன்னணி சார்பாக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் ரவீந்திரநாத் கலந்துகொண்டார்.

இந்து முன்னணி சார்பில் கொடுக்கப்பட்ட காவித்துண்டு அணிந்து மேடையில் தோன்றிய எம் பி ரவீந்திரநாத்குமார், மேடையில் பேச்சை தொடங்கினார் திருச்சியில் நடைபெற்ற ரயில்வே துறை சார்பிலான கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுவிட்டதால், இங்கே வருவதற்கு சற்று காலதாமதம் ஆகிவிட்டது மணித்துக்கொள்ளுங்கள் . தேனி மாவட்டத்துக்கான போடி – மதுரை அகல ரயில்பாதை திட்டத்தை விரைந்து முடிக்கக் கோரியும் திண்டுக்கல் – லோயர்கேம்ப் புதிய ரயில் திட்டத்தை செயல்படுத்தக் கோரியும் கடந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளேன்.

Loading...
READ  தமிழகத்திற்கு புதிதாக மேலும் இரண்டு மத்திய அமைச்சர்கள் குஷியில் பாஜக மற்றும் அதிமுகவினர் !

கடந்த ஆண்டு, இதே சின்னமனூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நான் தான் தொடங்கிவைத்தேன். தற்போது, நாடாளுமன்ற உறுப்பினராக இந்த ஊர்வலத்தைத் தொடங்கிவைப்பதில் மகிழ்ச்சி . கடந்த ஆண்டு பேசும்போது, மோடியே அடுத்த பிரதமராக வருவார் என நான் தெரிவித்தேன் . அதேபோல அவரே பிரதமராக வந்துவிட்டார்.

இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கான முயற்சியில் நம் பிரதமர் ஈடுபட்டுவருகிறார். நாம் அனைவரும் இணைந்து, வலிமையான புதிய பாரதத்தை உருவாக்க ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும். நாம் முதலில் இந்து. அதற்கு அப்புறம்தான் மற்றது எல்லாம் என்றார்.
அப்போது கைதட்டி அங்கு கூடியிருந்த மக்கள் ஆரவாரம் செய்தனர்.

வீடியோ பார்க்க கிளிக் செய்யவும்

தமிழகத்தை பொறுத்தவரை இந்து மதத்தை விமர்சித்து வந்தவர்கள் மத்தியில் ரவீந்திரநாத்குமாரின் பேச்சு தனித்துவம் பெற்றிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் திராவிட கழகத்தை சேர்ந்த அருள்மொழி ரவீந்திரநாத் குமார் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

READ  பாண்டே வேண்டுதல் நிறைவேறியது ! இனி 24 மணி நேர தொலைக்காட்சியில் பாண்டே ரீ என்ட்ரி !

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here