#24BREAKING தமிழக முதல்வர் பொறுப்பில் ஓபிஎஸ் 15 நாட்கள் செயல்படுவார் ! காரணம் என்ன?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சென்னை.,

நாடுமுழுவதும் 73 வது சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது டெல்லியில் பிரதமர் மோடி தேசிய கொடியினை ஏற்றினார், தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி தேசிய கொடியினை ஏற்றி அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் தற்போது தமிழக அரசியலில் மற்றொரு முக்கிய மாற்றம் நடைபெற இருக்கிறது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த மாத இறுதியில் அரசுமுறை பயணமாக இரண்டு வாரம் வெளிநாடு செல்ல இருக்கிறார். இதனால் தமிழகத்தில் முதல்வர் வகித்த அனைத்து பொறுப்புகளும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட இருக்கிறது.

READ  BCCI அறிவிப்பு ஹோலியின் கருத்தை ஏற்கமுடியாது. இவர்களில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் தெரியுமா?

எடப்பாடி தரப்பு முதலில் பொறுப்புகளை ஓ பி எஸ் வசம் ஒதுக்காமல் நேரடியாக வெளிநாட்டில் இருந்து செயல்படலாம் என்றுதான் திட்டமிட்டு காய் நகர்த்தியிருக்கிறது. ஆனால் இந்தியாவின் மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டால் அதன் காரணத்தை உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்க வேண்டும் அந்த வகையில்தான் உள்துறை அமைச்சர் அமிட்ஷாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Loading...

சென்னை வந்திருந்த அமிட்ஷா கட்சியிலும் ஆட்சியிலும் மூத்தவரான பன்னீர் செல்வம் அவர்களிடம் துறைகளை ஒதுக்குவதே சிறப்பானதாக இருக்கும், ஜெயலலிதா அவர்கள் இருந்திருந்தால் இதைத்தான் செய்திருப்பார் என்று கூறியதை அடுத்து பழனிசாமி தரப்பு வேண்டா வெறுப்பாக சம்மதித்துள்ளது.

முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் நீக்கப்பட்டபோதே தென் மாவட்ட அமைச்சர்கள், சி வி சண்முகம் ஆகியோர் அனைத்து முடிவுகளையும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களே எடுக்கின்றனர் என்று பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் எடப்பாடி இல்லாத நிலையில் என்ன மாதிரியான பாதிப்புகளை அரசில் ஏற்படுத்தும் என்று அச்சத்தில் உள்ளது எடப்பாடி தரப்பு.

READ  BREAKING சன் டிவி க்கு தடையா? சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல் ! இதற்கும் மோடிதான் காரணமா?

மேலும் இதனை நினைவுப்படுத்தும் விதமாகதான் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி நீங்கள் இந்த மாத இறுதியில் வெளிநாடு போகிறீர்களே சீன் போடவா என்று கேட்டார். அதாவது அங்கு நடக்கும் விவாதங்கள் என்னவென்பது எனக்கும் தெரியும் என்று குதர்க்கமாக குத்தி காட்டி இருக்கிறார் ஸ்டாலின்.

இனி அரசியலில் மாற்றங்கள் ஏற்படுமா என்பதனை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும். எடப்பாடி இல்லாத நிலையில் அந்த 15 நாட்கள் ஓபிஎஸ் முதல்வராக செயல்படுவார் என்பதுமட்டும் தற்போது உறுதியாகியுள்ளது.

©TNNEWS24

வடிவேலு பாணியில் 100 ரூபாய் கொடுக்காதவரை விரட்டிவிட்ட வைகோ வீடியோ


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here