பா.சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறைக்குள் கடும் போட்டி…செய்வாய் கிழமை முதல் அமலாக்கத்துறை கஸ்டடியில் பா.சிதம்பரம்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு மேல்முறையீடு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில், சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, இதற்கு எதிராக பா.சிதம்பரம் தரப்பில் ஜாமீன் கேட்டு, அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு நடுவில் சி.பி.ஐ பா.சிதம்பரத்தை கைது செய்து டெல்லியிலுள்ள சி.பி.ஐ கோர்ட்டில் வியாழன் அன்று ஆஜர் படுத்தியது. சி.பி.ஐ கோர்ட் ப.சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு அளித்தது.

இந்த வழக்கை எதிர்த்தும் பா.சிதம்பரம் தரப்பில் முன்ஜாமீன் கோரப்பட்டது. அப்போது சிதம்பரத்திற்காக ஆஜரான வக்கீல் வாதாடுகையில், சட்ட பிரிவு 21ன் கீழ், முறையாக முன் ஜாமீன் மனுவை நாங்கள் சமர்ப்பித்தும், ப.சிதம்பரத்தை கைது செய்தது சட்டவிரோத செயலாகும். அதனால் மனுதாரரை கைது செய்திருந்தாலும் பரவாயில்லை மீண்டும் இந்த முன்ஜாமீன் மனுவை ஏற்று, சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த மனுவை 26 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறி உத்தரவிட்டார்.

READ  கதை திருட்டுகள் அதிக அளவில் நடக்கிறது...டைரக்டர் பாக்கியராஜ் கவலை.

இதை தொடர்ந்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், சிதம்பரம் தரப்பில் கொடுக்கப்பட்ட முன்ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டது. அப்போது சிதம்பரம் தரப்பில் ஆஜரான வக்கீல் அபிஷேக் ஐகோர்ட்டில் மனுதாரருக்கு, உரிய முன்ஜாமீன் மனுவை வழங்கியும் அதனை நிராகரித்தது சட்டத்தை அவமரியாதை செய்யும் செயல் என்று கூறினார்.ப.சிதம்பரத்திற்கு ஏற்கனவே ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீன் கொடுக்கப்பட்ட நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் தர நீதிபதி மறுத்துவிட்டார், இதனால் பொருளாதார குற்றங்களில் முன்ஜாமீன் பெரும் நடைமுறையை ரத்து செய்து உத்தரவிடவேண்டும் என்று கோர்ட் கவனத்தில் எடுத்து கொள்வது நல்லது என்று கூறினார்.

ஒருபுறம் அமலாக்கத்துறை, மறுபுறம் சி.பி.ஐ என்று 6 வழக்குகளில் சிக்கி தவிக்கும் பா.சிதம்பரம், ஒன்றில் ஜாமீன் கிடைத்தாலும் மற்றொன்றில் சிக்குவார் போல் உள்ளது. இதில் சி.பி.ஐக்கும் அமலாக்கத்துறைக்கும் போட்டி நிலவுகிறது. திங்கள் வரை சி.பி.ஐ கஸ்டடியில் இருக்கும் பா.சிதம்பரம், செய்வாயிலிருந்து அமலாக்கத்துறை கஸ்டடிக்கு உட்பட்டு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Loading...
READ  அசாம் மாநிலத்தில் 19 லட்சம் நபர்கள் நீக்கப்பட்டது குறித்து பானு கோம்ஸ் கருத்து !

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here