வைரமுத்து பாணியில் மண்டியிட்டார் ரஞ்சித் ! எதற்கு இந்த வீண் விளம்பரம் .

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

வைரமுத்து பாணியில் மண்டியிட்டார் ரஞ்சித் ! எதற்கு இந்த வீண் விளம்பரம் .

மதுரை .

திரைப்பட இயக்குனர் ரஞ்சித் பேசிய கருத்துக்கள் தற்போது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது . தனது சமூகத்தை ஆதரிப்பதாக கூறி ரஞ்சித், ராஜ ராஜசோழன் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் . உலகில் மிகவும் புகழ்பெற்ற மன்னர்களில் ஒருவரான ராஜராஜசோழன் குறித்து ரஞ்சித் குற்றம் சுமத்தியதை பல வரலாற்று அறிஞர்களும் மறுத்துள்ளனர் .

ரஞ்சித்தின் கருத்துக்களால் கோபமடைந்த இளைஞர்கள் இணையதளங்களில் ரஞ்சித்திற்கு எதிராக கடுமையான பதிவுகளை பகிர்ந்து தங்கள் எதிர்ப்பினை ஒருகட்டத்தில் மெண்டல் ரஞ்சித் என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர் அதற்கு நேபாள் நாட்டு மக்களும் ஆதரவு தெரிவித்தனர் .

Loading...
READ  தவறு செய்வது முதலமைச்சராக இருந்தாலும், தண்டிக்கப்படுவார்...மத்திய அரசு எச்சரிக்கை

இந்நிலையில் காவல் நிலையத்தில் பாஜக சார்பில் சாதிய மத மோதல்களை தூண்டும் விதமாக ரஞ்சித் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ரஞ்சித் கைது செய்யப்படலாம் என்று கருத்து நிலவுவதால் தற்போது வைரமுத்து ஆண்டாள் விவகாரத்தில் எப்படி நீதி மன்றத்தில் பல்டி அடித்தாரோ அதே வழியை பின்பற்றியிருக்கிறார் ரஞ்சித் நான் ராஜா ராஜன் பற்றி தவறாக பேசவில்லை என்றும் சில நூல்களில் உள்ள தகவல்களை தான் மேற்கோள்காட்டி பேசியிருப்பதாகவும் நீதிமன்றத்திடம் மண்டியிட்டுள்ளார் .

அதோடு நில்லாமல் உடனடியாக தனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளார். மேடைகளில் உன் கடவுளையே நான் சாப்பிடுவேன்டா என்று வீரவசனம் பேசிவிட்டு தற்போது நீதிமன்றத்தில் ரஞ்சித் முன்ஜாமீன் கேட்டு மண்டியிட்டிருப்பது பலத்த கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது .

READ  பேசி ஒருமணி நேரம் ஆகவில்லை இப்படி ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு அசிங்கப்படுத்திட்டாரே ரவீந்திரநாத்.

TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here