மதம் மாறினால் ஊருக்குள் அனுமதியில்லை பெரியார் வந்தால் என்ன யாரு வந்தா என்ன கெத்தாக தீர்ப்பு சொல்லும் ஊர் தலைவர் வைரலாக பரவும் வீடியோ

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

பரவை.,

மதுரை மாவட்டம் பரவை பகுதியில் காட்டு நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள் இவர்கள் தங்களுக்கு என்று கலாச்சாரங்களை கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அதில் முக்கியமாக யாராவது மதம் மாறினால் அவர்களை ஊருக்குள் அனுமதிப்பது இல்லை என்றும் அவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்றும் முடிவெடுத்து வாழ்ந்து வந்தனர்.

அந்தவகையில் கடந்த 1984 – ஆண்டு மதமாறிய ராஜரெத்தினம் எனும் நபர் அவருடைய வம்சா வழியினர் தற்போது 30 குடும்பங்களாக கிறிஸ்த்தவ மதத்தை பின்பற்றி பரவை பகுதியில் வசித்து வருகின்றனர். அவர்களை இந்து மதத்தில் வசிக்கும் மக்கள் யாரும் தொடர்பு கொள்வதில்லை குறிப்பாக 30 கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஊருக்குள் உள்ள இந்து மக்களை ஆசை காட்டி மதம் மாற்றுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தற்போது அவர்களை ஊருக்குள் வரக்கூடாது என ஊர் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Loading...
READ  என்ன மதம் மாற்ற இந்தளவுக்கு கீழ்த்தரமா இறங்கிட்டாங்க இப்படியும் சில இளம் பெண்கள் ! வீடியோ இணைப்பு

தற்போது கிறிஸ்தவ மதத்தை தழுவிய 30 குடும்பங்களும் மதுரை ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர், அதில் பெரியார் மண்ணான தமிழகத்தில் எங்களை சுதந்திரமாக நடமாடவிடாமல் கடுப்பதாகவும் இதற்கு காரணமான அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

இதனை கருத்தில் கொண்டு மீண்டும் ஊர் பஞ்சாயத்து கிராமத்தில் கூடியது அப்போது பேசிய ஊர்த்தலைவர் பெரியார் கிடக்கட்டும் இன்று நீங்கள் ஊருக்குள் வருவீர்கள், நாளை எங்க சாமியை கும்பிடும்போது உங்க தெருப்பக்கம் வரக்கூடாது என்று சட்டம் பேசுவீர்கள் இது தேவையில்லை, நீங்கள் எங்கு சென்றாலும் பரவாயில்லை மதம் மாறியவர்களுக்கு ஊருக்குள் அனுமதியில்லை என்று தெளிவாக சொல்லிவிட்டார்.

தற்போது அந்த விடீயோவின் ஒரு பகுதி நமக்கு பிரத்தியேகமாக கிடைத்துள்ளது.

READ  மதமாற்ற வந்த பாதிரியாருக்கு சாணி அடி ! கூட வந்த அருள்சகோதிரிகள் ஓட்டம்? (Video )

மேலும் 30 குடும்பமும் இந்து மதத்திற்கு மாறினால் மட்டுமே நாங்கள் ஊருக்குள் அனுமதிப்போம் என்று ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் சொல்லிவிட்டார்கள்.

தமிழகத்தில் இப்படி ஒரு கிராமமா என்ற ஆச்சர்யமும் எழுந்துள்ளது. இதோ அந்த வீடியோ


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here