வேலூர் தொகுதியில் வெற்றி யாருக்கு தமிழக முடிவுகளை சரியாக சொன்ன ஒரே நிறுவனத்தின் கருத்து கணிப்பு வெளியீடு

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

வேலூர்.,

இந்தியாவில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அவருக்கு நெருங்கியவர்கள் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டதால் தேர்தல் நிறுத்தபட்டு தற்போது மீண்டும் அறிவிக்க பட்டுள்ளது.

வேலூர் தொகுதியை பொறுத்தவரை vanniya, முதலியார் மற்றும் தலித், இஸ்லாமியர்கள் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளன. குறிப்பாக இஸ்லாமியர்கள் வாக்குகளை குறிவைத்து திமுக களம் இறங்கியுள்ளது, அதே நேரத்தில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் முதலியார் சமூகம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் வாக்குகளை குறிவைத்து களத்தில் இறங்கியுள்ளார், இதில் மூன்றாவது அணியாக நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது.

Loading...

தினகரன் மற்றும் கமல் ஆகியோர் தேர்தலில் இருந்து ஒதுங்கி கொண்டார்கள். இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை ஒவ்வொரு தமிழகத்தை ஊடகங்கள் முதல் தமிழக சிறு பத்திரிகைகள் வரை கணித்தன, ஆனால் அவற்றில் பெரும்பாலான கணிப்புகள் எடுபடவில்லை.
இந்நிலையில் தற்போது வேலூர் தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கணிப்பினை.

READ  தாலி கட்டும் நேரத்தில் திருமணத்துக்கு தடை விதித்த உறவினர்கள்! பின்னர் மாப்பிள்ளை செய்த செயலுக்கு குவியும் பாராட்டு

ஒ. பி. சி நிறுவனம் கணித்துள்ளது இதற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை ஓரளவு துல்லியமாக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை எதிர்த்து திமுகவின் சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். திமுக மூத்த தலைவர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் என்பது கூடுதல் பலம். இதனால் வலிமையான இருவேட்பாளர்கள் மோதும் தொகுதியாக வேலூர் உள்ளது. 

இந்த இருகூட்டணியைத் தவிர மற்ற கட்சிகளுக்குப் பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லாததால் இந்த இரு அணிகளுக்கு இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. கதிர் ஆனந்தைப் பொறுத்தவரையில் திமுகவின் வலிமையான வாக்கு வங்கியுடன், இந்தத் தொகுதியில் முஸ்லிம்களின் வாக்குகள் இருப்பது கூடுதல் பலம். 

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக என எந்தக் கட்சிக்கும் பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை. அதேசமயம், அதிமுகவின் வாக்கை நம்பி களமிறங்கியுள்ள ஏ.சி. சண்முகத்துக்கு சொந்த செல்வாக்கு கூடுதல் பலம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சின்னத்தில் போட்டியிட்ட Ac சண்முகம் திமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தது குறியிடத்தக்கது எனினும் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு இங்கு பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை இதனால் அதிமுக மற்றும் திமுகவின் தனிப்பட்ட வாக்குவங்கியே நேரடியாக மோதும் களமாக அமைந்துள்ளது.

READ  உதயநிதி மகன் குறித்து நத்தம் விஸ்வநாதன் கிண்டல் !

தற்போதைய வேலூர் தொகுதியை பொறுத்தவரை திமுக எந்த வாக்குறுதியையும் அளிக்க முடியாது காரணம் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டது, தமிழகத்திலும் அதிமுக ஆட்சி தொடருகிறது எனவே இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இடையேயேயான போட்டியில் ac சண்முகத்தின் சொந்த பலம் மற்றும் வாக்குகள் அவருக்கு முன்னிலையை அளிக்கின்றன.

அத்துடன் இடைத்தேர்தலை போன்று நடை பெரும் தேர்தல் என்பதாலும் அமமுக  போட்டியிடாதது போன்ற காரணங்களால் அரசு இயந்திரங்கள் ஆளும் கட்சிக்கு சாதகமாக அமைவதால் இந்த தேர்தலில் ac சண்முகம் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கணித்துள்ளது ஒ பி சி நிறுவனம்.

முடிவு :-

இடைத்தேர்தல் போன்று நடைபெறும் தேர்தல் என்பதாலும் மத்தியில் மீண்டும் வலுவான பாஜக ஆட்சி அமைந்துள்ளதால் அதிமுக வேட்பாளர் AC சண்முகத்திற்கு இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணித்துளித்துள்ளது. (கடந்த தேர்தலில் ஓபிசி நிறுவனம் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. )

READ  இந்துமதம் குறித்த சர்ச்சை பேச்சு நடிகர் சூர்யாவிற்கு வானதி ஸ்ரீனிவாசன் பதிலடி

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here