மதுரை அரசு மருத்துவமனையிலிருந்து சரக்கு வகணங்களில் அனுப்பப்படும் நோயாளிகள் வெளியான அதிர்ச்சிகர உண்மை?

0

மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனை செல்பட்டு வருகிறது, இந்த மருத்துவமனைக்கு 7 மாவட்டங்களில் இருந்து உள் மற்றும் வெளி நோயாளிகள் என தினமும் 10, 000 நோயாளிகள் வருகின்றனர்.

இந்த அளவிற்கு நோயாளிகள் வரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையின் நிலையோ பரிதாபமாக உள்ளது.

காரணம் 3 இடங்களில் இந்த மருத்துவமனை செயல்படுவதால் நோயாளிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல இந்த மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி உள்ளது.

ஆனால் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள 4 ஆம்புலன்ஸ்களும் பழுதடைந்து செயல்பட முடியாத நிலையில் உள்ளது.

இதனால் நோயாளிகளை சரக்கு வாகனங்கள் மற்றும் வேன்களில் ஏற்றி செல்லும் நிலை உள்ளது , பல நோயாளிகள் வலுக்கட்டாயமாக சரக்கு வாகனங்களில் ஏற்றி அனுப்பப்படுகின்றனர்.

இந்த தகவலை அங்குள்ள நோயாளிகள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர் இந்த அவல நிலை தொடராமல் இருக்க விரைவில் AIIMS மருத்துவமனையை கட்டி முடித்து செயல்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்று மதுரை மக்கள் கோரிக்கை விடுத்ததுடன் உடனடியாக ஆம்புலன்ஸ் வசதி செய்துதர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here