திருப்பூரில் நாய்களை விரட்டி விரட்டி குத்தி கொன்ற பொதுமக்கள் வாயடைத்து நின்ற விலங்குகள் நல வாரியம் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள 30 மேற்பட்ட தெரு நாய்களை பொதுமக்களே துரத்தி துரத்தி கற்கள் , தடி மற்றும் ஈட்டி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்கி கொன்று குவித்தனர்.

தாராபுரம் அருகே உள்ள பல கிராமங்களை சேர்ந்த 400 மேற்பட்ட பொதுமக்கள் தான் இந்த செயலை செய்தது , காங்கேயம் , தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செம்மறி ஆடு வளர்ப்பு அதிகஅளவில் நடைபெறுகிறது.

தங்களிடம் உள்ள நிலத்திற்கு ஏற்ப அனைவரும் 50 முதல் 500 ஆடுகள் வரை வைத்துள்ளனர்., அங்கு கடந்த சில நாட்களாக தாராபுரம் நகரில் சுற்றிவரும் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆடுகளை வேட்டையாட துவங்கியது.

அதை விரட்ட நினைத்த சில விவசாயிகளையும் அந்த தெரு நாய்கள் தாக்கியதில் அவர்களும் காயமடைந்தனர்.

Loading...
READ  உஷாரான தமிழர்கள் பழையபடி பானிபூரி விற்க செல்லும் பியூஸ் மனுஷ் அதுதான் இந்த மாற்றமா?

சரியாக அதிகாலை நேரம் 3 மணியளவில் பெரும் கூட்டத்துடன் வரும் இந்த நாய்கள் தினம் ஒரு தோட்டமாக புகுந்து 10 -20 ஆடுகளை கொன்று தின்றுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசிடம் புகாரளித்தும் பயனில்லை அதை தொடர்ந்து ஒன்று திரண்ட விவசாயிகள் ஈட்டி , உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் பைக் , கார் உள்ளிட்ட வாகனங்களில் அந்த நாய்களை விரட்ட துவங்கினர்.

அந்த நாய்களால் பாதிக்கப்பட்ட பல கிராம இளைஞர்களும் ஒன்று சேர பெரும் கூட்டம் கூடியது 4 திசையில் இருந்தும் நாய்களை விரட்டி தாராபுரம் குப்பை கிடங்கிற்கு கொண்டு வந்தனர்.

6 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த குப்பை கிடங்கை சுற்றி 8 அடி உயர சுற்று சுவர் உள்ளது அதனால் நாய்கள் தப்பிக்க வழியில்லாமல் அதன் கதவுகளை மூடி

உள்ளே நுழைந்த 400 மேற்பட்ட விவசாயிகள் ஈட்டி கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்கி அனைத்து நாய்களையும் விரட்டி விரட்டி கொன்றனர்

READ  கடைசிவரை பதில்சொல்லாமல் தெறித்து ஓடிய ஷாநவாஸ் தெறிக்கவிட்ட சத்யகுமார் !

ஓடமுடியாமல் குப்பைக்குள் பதுங்கிய நாய்களை ஈட்டிகளை கொண்டு குத்தி கொன்றனர் அந்த குப்பை கிடங்கில் 30 மேற்பட்ட நாய்கள் கொல்லப்பட்ட நிலையில்,

சில நாய்கள் மட்டும் தாராபுரம் நகருக்குள் சென்று தப்பியது , இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் கேள்விகேட்டபோது

இந்த நாய்களால் கொல்லப்பட்ட எங்கள் ஆடுகளும் விலங்குகள் தானே அவற்றிக்கு என்ன பதில் சொல்வீர்கள் எங்களில் பலருக்கு 5000 முதல் 80 ,000 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது அதை உங்கள் விலங்குகள் நல வாரியம் தருமா ? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அந்த ஆடுகளை நம்பி பல குடும்பங்கள் உள்ளது அவர்ளுக்கு இது பெரும் இழப்பு , இந்த செயலை அரசு செய்ய வேண்டும் நாங்கள் செய்துள்ளோம் என்று கூறினார்

READ  WWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.

மேலும் அந்த நாய்களை கொன்றதற்காக வழக்கு போடவேண்டுமென்றால் 400 மேற்பட்டவர்கள் மீது போடவேண்டும் அதனால் வேறு வழியின்றி அவர்கள் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here