பெரியார் மண்ணிலா இப்படி ஒரு கொடுமை நடந்தது அறிக்கை வெளியிட்ட வீரமணி

0

பெரியார் மண்ணிலா இப்படி ஒரு கொடுமை நடந்தது அறிக்கை வெளியிட்ட வீரமணி

சமூகவலைத்தளம்.,

Loading...

திராவிட கழக தலைவர் வீரமணி தலித் சமூகத்தை சேர்ந்த ஆண் ஒருவர் துன்புறுத்தப்பட்ட நிகழ்வை கண்டித்ததுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜாதி ஒழிப்பு – தீண்டாமை ஒழிப்பு – மத மாச்சரிய ஒழிப்புகளை முன்னிறுத்திய தீவிரப் பிரச்சாரம் மீண்டும் ‘விசுவரூபம்‘ எடுத்தாகவேண்டும்!

ஜாதி வெறி – சமய வெறிக்கு இடமில்லை என்று காட்டவேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்!

தாழ்த்தப்பட்டவரின் வாயில்

மனிதக் கழிவை ஊற்றுவதா?

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மன்னார்குடி அருகே உள்ள திருவண்டு துறை என்ற கிராமத்தில், செங்கல் சூளை வைத்துள்ள (கொல்லிமலை என்ற) தாழ்த்தப்பட்ட சமுகத்தினைச் சேர்ந்த ஒருவரை, அவர் கடந்த 28 ஆம் தேதி இரவு 2.30 மணியளவில் பணி முடித்து தனது இரு சக்கர வாகனத்தில் வரும்பொழுது சாலையின் குறுக்கே கட்டை போடப்பட்டு இருந்ததால், நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

முத்து, ராஜேஷ், ராஜ்குமார் என்ற மூன்று நபர்கள் – இவர்கள் உறவுக்காரர்கள். கீழே விழுந்த உடனே, கொல்லிமலையை மரத்தில் கட்டி வைத்து அவரது வாயில் மலத்தில் துவைக்கப்பட்ட ஒரு குச்சியை விட்டதோடு, மனிதக் கழிவையும் அவர் வாயில் ஊற்றி, மேலும் அவர்மீது சிறுநீர் கழித்து, அவரை மிகவும் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொடுமைப்படுத்தியதாக அவர் கொடுத்த புகார்மீது காவல்துறையினர், இந்த குறிப்பிட்ட மூவரில் இருவரை மட்டும் கைது செய்துள்ளதாக செய்தி வருவதோடு, மற்ற குற்றவாளிகளைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் இன்று சில ஏடுகளில் வந்துள்ள செய்தியை அறிந்து மிகவும் வேதனையும், துயரமும், வெட்கமும் அடைந்தோம்.

READ  கமலுடன் இணையும் பனிமலர் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடி என்ட்ரி ?

சட்டப்படி கடுமையான நடவடிக்கையெடுக்க தமிழகக் காவல்துறை தயங்கக்கூடாது

தந்தை பெரியார் மண்ணிலா இப்படி ஒரு காட்டுமிராண்டித்தன கீழ்த்தரக் கொடுமை? தாக்கப்பட்டவர்மீது அதற்கான காரணம் என்னவாக இருந்தாலும்கூட, இத்தகைய மனிதாபிமானற்ற, கீழ்த்தர, அநாகரிக, அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டோர் எவராயினும், எந்த ஜாதியினராயினும், எவ்வளவு செல்வாக்குள்ள நபர்கள் ஆனாலும், அவர்கள்மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கையெடுக்க தமிழகக் காவல்துறையும் தயங்கக்கூடாது.

மற்றொரு ‘‘திண்ணியம்‘’
மீண்டும் இந்த மண்ணில் நடக்கலாமா?

மனித உரிமைகளுக்கு எதிரான மற்றொரு ‘‘திண்ணியம்‘’ மீண்டும் இந்த மண்ணில் நடக்கலாமா? நடப்பதை அனுமதிக்கலாமா?
இது ஜாதி மோதல்களாகவோ, கலவரங்களாகவோ உருவெடுப்பதற்கு முன்னரே, சட்டம் தனது கடமையை உடனடியாகச் செய்திட முன்வரவேண்டும்.
எதிலும் ஜாதி, எங்கும் ஜாதி உணர்வு, எவ்விஷயத்திலும் ஜாதியப் பார்வையுடன் இயங்கும் நம் நாட்டில் – சமுதாயத்தில், இரண்டு நபர்களிடையே நடைபெறும் பழிவாங்கல் சண்டைச் சச்சரவுகளுக்கு ஜாதிச் சாயம் உடனுக்குடன் ஏற்றப்பட்டு, அத்தீப்பொறி, பெரும் தீப்பிழம்புகளை உருவாக்காமல் உடனடியாக அணைக்கப்பட தமிழக அரசின் காவல்துறை தயவு, தாட்சண்யம் பாராமல், உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து கூண்டில் நிறுத்தி தண்டனை வாங்கித் தரத் தயங்கக் கூடாது!
தேர்தல் முடிந்த உடன், சமுக வலைத்தளங்களில் பரவிய ஒரு ஜாதி பற்றிய அவதூறு எத்தகைய சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கியது என்பதை நாடு அறியும்.

READ  பாஜகவில் இணைய போகிறாரரா MP வசந்தகுமார் , அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் !

பொன்னமராவதி நிகழ்ச்சிகள் மக்கள் நினைவிலிருந்து இன்னும் நீங்காத நிலையில், இப்படி ஒரு கொடுமையா?

அச்செய்கைக்கான காரணக் குற்றவாளிகளின் கயமைத்தனம் எத்தகைய விலை கொடுக்கவேண்டிய விபரீத விளைவுகளை உருவாக்கியது – பொன்னமராவதி மற்றும் புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் என்பதும் இன்னும் மக்கள் நினைவிலிருந்து நீங்காத நிலையில், இப்படி ஒரு கொடுமையா?
குற்றவாளிகளைத் தண்டனைக்குரியவர்கள் ஆக்கும் அதே நேரத்தில், இதற்கு ஜாதிச் சாயம் பூசி, ஜாதிக் கலவரங்களாக உருமாற்றும் முயற்சிகளுக்கு மறைமுகமாக எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றுவதா?
அனைவரும் சகோதரர்கள் – ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்!’’ என்ற குரல் கேட்ட மண்ணிலா இப்படி சில அற்பத்தன ஆபாச அருவருப்பு நிகழ்வுகள்?

சுயமரியாதை – சமத்துவத்தை விரும்பாதவர்கள் மனிதாபிமானற்றவர்களே!

READ  கோரிக்கை வைத்த 48 மணி நேரத்தில் தமிழகத்திற்கு உதவிய நிர்மலா சீதாராமன் K.T ராகவன் பெருமிதம் !

பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் படித்து மானமும், அறிவும் பெற்று சுயமரியாதை – சமத்துவம் விரும்புவதை – மனதாலும், சமுக ரீதியாகவும் இன்றும் ஏற்கத் தயங்குவோர் எவராயினும் அவர்கள் மனிதாபிமானற்றவர்களே!
ஜாதி ஒழிப்பு – தீண்டாமை ஒழிப்பு, மத மாச்சரிய ஒழிப்பு – இவைகளை முன்னிறுத்திய தீவிரப் பிரச்சாரம் மீண்டும் ‘விசுவரூபம்‘ எடுத்தாகவேண்டும்.
ஜாதி வெறி, சமய வெறிக்கு இடமில்லை என்று காட்டவேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்

8.5.2019
சென்னை

இவ்வாறு வீரமணி அறிக்கை ஒன்றிணை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் சாதியை ஒழித்த தலைவர் என்று பெரியாரை பெரியாரிஸ்ட்கள் சொல்லிவரும் வேலையில், ஒவ்வொரு நாளும் சாதி மோதல்கள் நடப்பது இதுதான் பெரியார் சாதியை ஒழித்த முறையா என கேள்வி எழுப்புகின்றனர்.

©TNNEWS24

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here