சேலத்தில் அடிவாங்கியதே போதும் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார் பியூஸ் முட்டு கொடுத்தவர்கள் அதிர்ச்சி !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

சேலத்தில் அடிவாங்கியதே போதும் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார் பியூஸ் முட்டு கொடுத்தவர்கள் அதிர்ச்சி !

சமூகவலைத்தளம்.,

சமீபத்தில் சேலம் பாஜக அலுவலகத்திற்கு பொருளாதார மந்தநிலை குறித்து கேள்வி எழுப்ப சென்ற பியூஸ் மனுஷிற்கு பாஜகவினர் மந்தநிலை குறித்து விளக்கம் அளித்ததோடு பியூஸ் மனுஷிற்கு அடிகொடுத்து அனுப்பினர் இதனை தொடர்ந்து பியூஸ் மனுஷிற்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் பியூஸ் ஏன் பாஜக அலுவலகம் செல்லவேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் எதிர் கேள்வி எழுப்பி வந்தனர்.

மேலும் அனுமதியின்றி பாஜக அலுவலகம் சென்ற பியூஸ் மனுஷ் மீதும் அவரை தாக்கியவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்நிலையில்தான் தனியார் யூடுப் சேனலிற்கு கடந்த 8-ம் தேதி பியூஸ் மனுஷ் பேட்டி கொடுத்தார், வழக்கம்போல் எப்போதும் பிஜேபியை எதிர்த்து பேசிய பியூஸ் ஒரே நாடு ஒரே ரேஷன் என்பது ஏமாற்று வேலை என்று கடுமையாக விமர்ச்சித்தார்.

Loading...
READ  வேலூர் தேர்தல் முடியும்வரை இந்து மதத்தை விமர்சனம் செய்வதோ பெரியார் புராணம் பாடவேண்டும் அத்துடன் இதுவும் கூடாது திமுக அறிவுறுத்தல் !

அத்துடன் கூடுதலாக ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என்ற கேள்விக்கு வரட்டும் வந்து ட்ரவுசர் கழண்டு ஓடட்டும் என்று கிண்டல் செய்ததுடன், ரஜினி 20 வருடமாக இதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார் வந்து முதலில் படு தோல்வி அடையட்டும் என்று கிண்டல் செய்தார், இதனால் ரஜினி ரசிகர்கள் கடுமையாக பியூஸ் மனுஸை விமர்சனம் செய்தனர்.

தேவகோட்டையை சேர்ந்த ரஜினி ரசிகர் சரவணன் என்பவர் பியூஸ் மனுஸை தொடர்பு கொண்டு கடுமையான வார்த்தைகளில் விமர்சனம் செய்தார், தலைவர் யார்கூட கூட்டணி வைக்கணும் வைக்க கூடாதுனு சொல்ல நீ யாருடா? சேலம் பாஜகவினர் போட்ட போடு உனக்கு பத்தவில்லை, நீ நாளைக்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் நாளை மறுநாள் ரசிகர்கள் அங்கே வருவோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

READ  மீண்டும் அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர் காரை தொட்டதற்கு வயதான முதியவரை எப்படி அடித்து வெளுக்கிறார்கள் என்று பாருங்கள் கண்கள் கலங்குகிறது !

இதனால் பதறிய பியூஸ் இப்போதான் சேலம் பாஜகவினரிடம் அடிவாங்கினோம் அடுத்து ரஜினி ரசிகர்களிடமா என்று கலங்கிய நிலையில் தனது மனைவியுடன் ஆலோசனை நடத்திய பின்பு நான் பாஜவுடன் கூட்டணி சேர்ந்தால் தான் விமர்சனம் செய்தேன் மத்தபடி எனக்கு ரஜினி எதிரியில்லை என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால் இரவு பகல் பாராது பியூஸ் மனுஷிற்கு முட்டு கொடுத்த பலர் வேதனை அடைந்துள்ளனர், குறிப்பாக திமுகவினர் கடுமையான அதிருப்தியில் உள்ளனராம்

விடீயோவை பார்க்க :-


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here