பாமகவில் அதிரடி களையெடுப்புகள் தொடக்கம் ! மாநிலங்களவைக்கு செல்கிறாரா புதுமுகம்?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

சென்னை.,

பாமக தேர்தல் தோல்விகள் குறித்து தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. தற்போது கீழ்மட்ட நிர்வாகிகள் தொடங்கி அனைத்து தரப்பினரும் தங்கள் பகுதிகளில் பதிவான வாக்குகள் மற்றும் களத்தில் பணியாற்றியவர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு கேட்டது .

அதன் முடிவுகளில் பாமகவினை அரசியல் களத்தில் இருந்தே வெளியேற்றவேண்டும் என்று சில ஊடகங்களும், பத்திரிகையாளர்களும் தீவிரமாக வேலை செய்தது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் திமுக இருந்ததாகவும் அதனை குறிப்பிட்ட ஊடகங்களின் முதலாளிகள் அரங்கேற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இன்னும் சில பாமக நிர்வாகிகள் ஜெகத் ரட்சகனுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இவை அனைத்தும் கட்சியினர் சார்பில் பெறப்பட்ட அறிக்கை.

Loading...
READ  விக்னேஷ்சிவனின் பிறந்தநாளுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் தெரியுமா

ஆனால் இவற்றை கடந்து தொண்டர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று தங்களுக்கு நெருக்கமான சில தனியார் ஏஜென்சிகள் மூலம் தகவல்களை கேட்டிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் பல அதிரடி மாற்றங்கள் பாமகவில் நடக்க இருக்கிறது.

குறிப்பாக மாற்றம் முன்னேற்றம் என்பது பெரு நகரங்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் எதிரொலித்தாலும் தனது சமுதாய வாக்குகளை கவர மீண்டும் பழைய அதிரடி அரசியலை கையில் எடுக்க கூறியுள்ளார்கள். மேலும் காடுவெட்டி குரு இருந்த நேரத்தில் பாமகவை விமர்ச்சிப்பவர்களுக்கு நேரடியாக எச்சரிக்கையினை விடுத்து வந்துள்ளார் அதுபோல் தற்போது ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் அரசியலில் இறங்க தொண்டர்கள் நினைப்பதாக அறிவுறுத்தியுள்ளார்கள்.

மேலும் விடுதலை சிறுத்தை கட்சியினரால் பல இடங்களில் போலி பி சி ஆர் வழக்குகளில் பாமகவினர் அதிகம் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு உதவுவதற்கு என்று தனி வழக்கறிஞர் பிரிவினை உருவாக்கவும் ராமதாஸ் தீர்மானித்துள்ளார்.

READ  ராஜீவ்காந்தியை கொன்றது விடுதலை புலிகள் இல்லை என்ன சீமான் இப்படி மாற்றி பேசிடீங்க ! ( video ) முட்டு கொடுத்த தம்பிகள் நிலைமை !

இதன் மூலம் தமிழக அரசியலில் பாமகவின் பலம் என்ன என்பதனை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு உணர்த்த தயாராகிவிட்டதாம் பாமக. மேலும் ஒழுங்காக செயல்படாத நிர்வாகிகளை மாற்றி இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்.

இந்த மாற்றங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் பாமக மீண்டும் பழைய பாமிற்கு திரும்புவது உறுதி என பலரும் கணித்துள்ளனர்.

நாளைய பதிவில் பாமக சார்பில் மாநிலங்களவைக்கு புது முகம் செல்கிறாரா? என்ற தகவலை தருகிறோம் இணைந்திருங்கள்

எங்களது செய்திகளை உங்களது வாட்சாப் எண்ணில் உடனுக்குடன் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here