சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய அமைச்சர்கள் பெயர் வெளியானது?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சமூகவலைத்தளம்.,

சிலைகடத்தல் வழக்கில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக பொன்மாணிக்கவேல் நேற்று நீதி மன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சிலை கடத்தலில் தொடர்புடைய அமைச்சர்களின் பெயரை பிரபல இணையதளம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பொன்மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி யாக என்று நியமிக்க பட்டரோ அன்றில் இருந்து இன்றுவரை பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து பல்வேறுநாடுகள் மற்றும் நபர்களிடம்i இருந்து கடவுள் சிலைகள், மன்னர் இராஜா இராஜா சோழன் உள்ளிட்ட விலைமதிப்பு மிக்க சிலைகளை மீட்டு தமிழகம் கொண்டுவந்தார்.

Loading...

இதற்கு பொன்மாணிக்கவேல் அவர்களுக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வர அதை அவர் நீதிமன்றம் மூலம் வெற்றியடைந்து வந்திருக்கிறார், இந்நிலையில் வழக்கு விசாரணை தீவிரமடைந்த நிலையில் நீதிமன்றத்தில் அதிமுகவை சேர்ந்த இரண்டு அமைச்சர்களுக்கு சிலை கடத்தலில் தொடர்பு இருப்பதாக நேற்று தெரிவித்தார்.

READ  தேசபக்தியுடன், சுதந்திர தினத்திலிருந்து இதை பின்பற்றுவோம்...ஜெய் ஹிந்த்

தற்போது அவர்கள் யார் என்பதனை பிரபல தனியார் இணையதள (APP) way2news வெளியிட்டுள்ளது. அதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் மற்றும் சேவூர் ராமசந்திரன் என்று அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது இதுகுறித்த முழுமையான தகவல் வருகின்ற ஆகஸ்ட் 6- ம் நாள் தெரிந்துவிடும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் வெளியான நிலையில் திமுக அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்வியையும் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

SOURCE – http://way2.co/MjI2MTIxMQ==/95


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here