புல்வாமா தாக்குதல் கதையில் நடிக்கும் பிரபல நடிகர்…

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

ஜம்மு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதுவரை 2002 யில் காலூஸாக் ராணுவ தளம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலே பெரிதாக இருந்தது. ஆனால் இப்பொது புல்வாமா தாக்குதல் தான் இந்தியாவில் நடத்த மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் என்று பார்க்கப்படுகிறது. அதன் பிறகு இந்தியா பதில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை குண்டு வைத்து தகர்த்தது, இதில் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வந்தது.

இந்த புல்வாமா மற்றும் பால்கோட் சம்பவங்களை மையமாக வைத்து இந்தி, தமிழ்,தெலுங்கு என மூன்று மொழிகளில் படம் தயாராக இருக்கிறது. இந்த படத்தில் விவேக் ஓபராய் நடிக்க உள்ளார். இந்த படத்தை அவரே தயாரிக்கவும் உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள், இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளதாக விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா பதில் தாக்குதல் நடத்திய போது பாகிஸ்தானியர்களிடம் பிடிபட்ட இந்திய விங் கமேண்டோ அபிநந்தனின் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.

இந்தப் படம் குறித்து விவேக் ஓபராய் கூறுகையில். நமது ராணுவ படையின் இந்த தியாகத்தை போற்றுவது இந்தியன் என்ற முறையில் எனது கடமையாகும். அபிநந்தன் உள்ளிட்ட நமது ராணுவ வீரர்களின் சாகசங்கள் இந்த படத்தின் மூலம் வெளிவரும். பால்கோட் தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது, அபிநந்தன் உலக அளவில் நமது நாட்டிற்கு பெருமை தேடி தந்துள்ளார். இந்த படத்தை எடுக்க எனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அந்த நம்பிக்கையை காப்பாற்றுவேன் என்று விவேக் ஓபராய் கூறினார்.

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
READ  #breaking ரஜினி கட்சியின் பெயர் வெளியானது ! ரசிகர்கள் கொண்டாட்டம் திட்டமிட்டு கசியவிடப்பட்டதா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here