புரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

புரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் !

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்ற புரட்டாசி மாத சனி உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி மாதம் முழுவதும் 30 நாட்கள் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்தால் செல்வச் செழிப்பு உள்பட அனைத்துப் பலன்களும் ஒருங்கே கிடைக்கும் என்பது நம்பிக்கை ஐதீகம் . 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், அங்கு புரட்டாசி சனி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் அதிகாலை முதல் நம்பெருமாள், தாயார் மற்றும் சக்கரத் தாழ்வார் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது . நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Loading...
READ  "அல்லு விடுகிறதா" உலக லெவலில் ஹிட் அடித்த தம்பதியினர் ஹர்பஜன் ட்வீட்

அதுபோல் சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்து வழிபாடு செய்து வருகின்றனர். புரட்டாசி மாதத்தின் அனைத்துச் சனிக்கிழமைகளிலும் வழிபாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு இங்கு இலவசமாக லட்டு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டிப் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யபட்டு வருகின்றன.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் பலர் அசைவத்தை தவிர்த்து விரதம் இருந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here