அடுத்தடுத்து 2 படங்களில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்…இரண்டு படங்களுமே அடுத்த வருடம் ரிலீஸ் என தகவல்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

975 யில் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமான ரஜினிகாந்த், 16 வயதினிலே போன்ற படங்களில் வில்லனாக நடித்தார் , பிறகு கதாநாயகனாக பைரவி படத்தில் நடிக்க தொடங்கினர். ஆரம்ப காலத்தில் வருடத்திற்கு 20 க்கும் மேற்பட்ட படங்களில் ரஜினி நடித்து வந்தார். குறைந்தது வருடம்தோறும் 12 படங்களில் நடித்து வந்தார் ரஜினிகாந்த். ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் வெறும் 8 படங்களில் மட்டுமே ரஜினி நடித்துள்ளார்.

கடந்த வருடம் அரசியலுக்கு வரப்போவதாக ரஜினி அறிவித்தார். வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார். அதற்குள் சில படங்களில் நடித்து முடித்துவிட வேண்டும் என்றும் தீவிரமாக நடித்துக்கொண்டிருக்கிறார். போன வருடம் மட்டும் 2 படங்களில் நடித்தார். இந்தவருடம் பேட்ட படம் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கலுக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்த படமும் அடுத்த வருடம் இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் ரஜினியின் 2 படங்கள் திரைக்கு வர இருப்பது ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

READ  "தல 60" படத்தில் அஜித்துடன் பிக் பாஸ் புகழ் நடிக்கவுள்ளார்....

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here