பாண்டே வேண்டுதல் நிறைவேறியது ! இனி 24 மணி நேர தொலைக்காட்சியில் பாண்டே ரீ என்ட்ரி !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

பாண்டே வேண்டுதல் நிறைவேறியது ! இனி 24 மணி நேர தொலைக்காட்சியில் பாண்டே ரீ என்ட்ரி !

சென்னை.,

தமிழக ஊடகவியலாளர்கள் மத்தியில் பாண்டேவிற்கு என்று தனி அடையாளம் உண்டு, குறிப்பாக சொல்லப்போனால் அரசியல், சினிமா பிரபலங்களுக்கு மத்தியில் பாண்டேவின் பெயரும் தமிழகத்தில் பெரும்பான்மையான நபர்களுக்கு தெரிந்திருக்கிறது இதற்கு காரணமாக பார்க்கப்பட்டது, தந்தி டிவி யின் தொடக்கத்தில் ஆயுத எழுத்து எனும் விவாத நிகழ்ச்சியில் பாண்டே எழுப்பிய கேள்விகள் அதனை தொடர்ந்து கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களிடம் கேள்வியை எழுப்பி பதிலை பெற்ற விதம் இவற்றின் அடிப்படையில் பாண்டே மக்களிடம் பிரபலமடைந்தார்.

READ  தன்னுடன் நடித்த பிரபல நடிகையை 4 -வதாக கரம் பிடித்தார் கமல் சுதந்திர தினவிழாவில் வெளியான பரபரப்பு !

அதன் பிறகு மக்கள் மன்றம் நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியை தாண்டி நேரடியாக மக்களிடம் சென்றைடைந்தார் பாண்டே, பிறகு திடீர் என்று தந்தி தொலைக்காட்சியில் இருந்து பாண்டே விலகினார் தலைமை செய்தியாசிரியர் பொறுப்பில் இருந்தும் விலகினார் பாண்டே, இன்றுவரை ஏன் தந்தியில் இருந்து பாண்டே விளக்கினார் என்பதற்கான உண்மையான காரணங்கள் தெரியவில்லை.

Loading...

அதன் பிறகு தானே சொந்தமாக சாணக்யா எனும் இணையதள ஊடகத்தினை தொடங்கினார், அதன் மூலம் சமூக ஊடகங்களின் மூலம் செய்திகளை, முக்கிய நிகழ்வுகளின் மறுபக்கத்தை தெரிவித்து வந்தார், மேலும் கொடநாடு சம்பவம் குறித்து பாண்டேவின் சாணக்யா வெளியிட்ட வீடியோ அரசியல் வட்டாரத்தில் அடுத்தடுத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது அதனை தொடர்ந்து தனது சாணக்யா தொலைக்காட்சியின் மூலம் வேந்தர் தொலைக்காட்சியை எடுத்து நடத்தி வருகிறார் பாண்டே.

READ  தமிழக பாஜக தலைவர் மாற்றம் உறுதி ! புதிய தலைவர் யார்?

பாண்டே தகவல்களை சமூக ஊடகங்களின் மூலம் தொகுத்து வழங்கி வந்தாலும் அவரது ஆதரவாளர்கள் பாண்டேவை நேரடியாக தொலைக்காட்சிகளில் பார்க்க முடியவில்லையே என்று அவரிடமே நேரடியாக சொல்லி வந்தனர், அவரும் அதனை கருத்தில் கொண்டு சாணக்யா தொலைக்காட்சியை சாட்டிலைட் தொலைக்காட்சியாக மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார் தற்போது அதன் பலன் கிடைத்துள்ளது.

விரைவில் சாணக்யா தொலைக்காட்சி உலகம் முழுவதும் அனைத்து கேபிள், டிஷ், சந்தாக்களிலும் வெளியாக இருக்கிறது, இதற்கான 95% பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது, இதனால் விரைவில் பாண்டேவை பழையபடி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பார்க்கலாம் என்பதால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனை மனதில் வைத்துதான் பாண்டே வேண்டுதல் வைத்திருந்ததாகவும் , வேண்டுதல் நிறைவேறியதை தொடர்ந்து பாண்டே தனது தாடியை எடுத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

READ  இஸ்லாமியர்கள் குறித்த தனது கருத்தில் மாற்றமில்லை ரிச்சா பாரதி அதிரடி ! இந்தியா முழுவதும் குவியும் ஆதரவும் எதிர்ப்பும் !

இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து மக்களிடம் சென்றடையும் விதமாக பலரும் பகிர்ந்து பாண்டேய்விற்கு ஆதரவளித்து வருகின்றனர், மேலும் தமிழகத்தின் முன்னணி செய்தி தொலைக்காட்சியாக சாணக்யா வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here