இஸ்லாமியர்கள் குறித்த தனது கருத்தில் மாற்றமில்லை ரிச்சா பாரதி அதிரடி ! இந்தியா முழுவதும் குவியும் ஆதரவும் எதிர்ப்பும் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

ஜார்கன்ட்.,

ஜார்கன்ட் மாநிலத்தை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ரிச்சா பாரதி இன்று இந்திய அளவில் பேசு பொருளாகியுள்ளார் அதற்கு காரணம் தீவிரவாதிகள் குறித்த அவரது facebook பதிவிற்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனையும், அதனை ரிச்சா பாரதி எதிர்கொண்ட விதமும்தான் காரணம்.

19 வயதான முதலாமாண்டு கல்லூரி மாணவி ரிச்சா பாரதி தனது facebook பக்கத்தில் காஷ்மீரில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் அனைவரும் இஸ்லாமியர்களே, ஒரு இந்து காஷ்மீர் பண்டிட்கள் கூட தீவிரவாத செயலில் ஈடுபட்டது இல்லை அப்படி இருக்கையில் தீவிரவாதிகள் இஸ்லாமியர்கள்தானே என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு இஸ்லாமியர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் அமைப்புகள் போன்றவை தீவிரவாதிகளுக்கு மதமில்லை, இஸ்லாமியர்கள் குறித்த மாணவியின் பேச்சிற்கு அவருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும், இது பாசிசம் என்றும் மத மோதலை உண்டு பண்ண வாய்ப்புகள் அதிகம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

READ  தமிழகத்தில் ஒரு இந்து வேற மதத்தை இப்படி செய்திருந்தால் என்ன நடந்திருக்கும், 24 மணிநேரம் கெடுவிதித்தார் - கிருஷ்ணசாமி

அவரது கருத்தில் தவறு இல்லை என்றும் உண்மையை ரிச்சா பாரத் பிரதிபலித்திருப்பதாகவும் அவருக்கு ஆதரவாக இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் மதமோதல்கள் உருவாக வாய்ப்பிருப்பதாக கூறி தனியார் அமைப்பு கொடுத்த புகாரின்பேரில் காவல்துறை ரிச்சா பாரதியை கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு இன்று ராஞ்சி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது ரிச்சா பாரதிக்கு நிபந்தனைஜாமீன் வழங்குகிறேன் அதில் 5 குரான் புத்தகங்களை ரிச்சா பாரதி விநியோகிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இதனை பலரும் விமர்ச்சித்தனர் இதற்குமுன்னர் நடிகர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்றார் அப்போது நீதிமன்றம் அவரை பகவத் கீதை விநியோகிக்க கூறியதா?

இது தவறான தீர்ப்பு என்றும் விமர்சித்தனர் இந்நிலையில் ரிச்சா பாரத் தான் நீதிமன்றத்தை மதிப்பதாகவும் ஆனால் நிச்சயம் குரானை விநியோகிக்க போவதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிருப்பதாகவும் அதுவரை சிறையில் இருக்க தயார் என்றும் கூறியுள்ளார்.

READ  கமலின் குடும்ப ரகசியத்தை போட்டுடைத்தார் H ராஜா ! வெளிவந்த ரகசியம்.

19 வயதான கல்லூரி மாணவி ஒருவர் தனது கருத்தை சொல்லியிருப்பது கருத்து சுதந்திரம் ஆகாதா இதனை எதிர்க்கவேண்டிய அவசியம் என்ன இதேபோல் இந்து மதத்திற்கு பேசுகிற ஒவ்வொருவரையும் பகவத் கீதையை படிக்க சொல்ல நீதிமன்றத்திற்கு தோன்றவில்லையா என்றும் கேள்வி எலூயியுள்ளனர்.

தற்போது இந்திய அளவில் பலரும் ரிச்சா பாரதியின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று அனுப்பவும்

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here