நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் ராஜராஜன் மண்ணில் கோவில்கட்டமுடியாத பயங்கரம் , அடியாட்களை கொண்டு மிரட்டும் சர்ச் நிர்வாகம்?

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்


நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் ராஜராஜன் மண்ணில் கோவில்கட்டமுடியாத பயங்கரம் , அடியாட்களை கொண்டு மிரட்டும் சர்ச் நிர்வாகம்?

தஞ்சை.,

சிறப்பு கட்டுரை – உமாசங்கர்

தஞ்சையில் தலைவிரித்தாடும் கிறிஸ்தவ பயங்கரவாதம்!

நாங்கள் மட்டும்தான் மாதாவை கும்பிடணும்.. நீங்கள் பிள்ளையாரை கும்பிடக் கூடாது… இந்து கோவில் கட்டுவதற்கு தடை போடும்.. பாதிரியார்கள்.. தஞ்சையில் கொந்தளித்த மக்கள்……

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நிர்மலா நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் , அவர்கள் தங்கள் வழிபாட்டிற்காக இந்து கோவில் ஒன்றைக் கட்ட முடிவு செய்து 20 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்….

அப்பகுதி மக்கள் இந்து கடவுளை கும்பிட கூடாது கும்பிட்டால் தங்கள் வருமானம் பாதிக்கும் மதத்தை பரப்ப முடியாது என்பதற்காக மாதக்கோட்டை குழந்தை இயேசு கோவில் நிர்வாகத்தினர் அப்பகுதி மக்கள் கோவில் கட்டுவதற்கு தடையாக இருந்து வருகின்றனர். இன்று நேற்றல்ல கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தடுத்து வந்ததால் இன்று வரை

READ  திமுக சரவணன் மீது தேசிய பாதுகாப்பு தடுப்பு சட்டம் பாய்கிறது...NIA அதிரடி

அப்பகுதியில் கோவில் கட்டவில்லை, இதில் மக்கள் கடுப்பாகிப் போய் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப் போட்டு கோவில் கட்டிக் கொள்ள அனுமதி வாங்கி வந்துள்ளனர்,

இந்நிலையில் இன்று காலை கோவில் கட்டுவதற்க்காக பூமி பூஜை போட சென்ற பொதுமக்களை குழந்தை இயேசு கோவில் பாதிரியார்கள் நீங்கள் கோவில் கட்டினால் எங்களுடைய வழிபாடு பாதிக்கும் என்று சொல்லி தடுத்துள்ளனர்.

இதில் கடுப்பான அப்பகுதி மக்கள் எங்களை கோவில் கட்டக் கூடாது என்று சொல்ல நீங்கள் யார் உங்கள் வருமானத்துக்காக எங்களை தடுக்க வேண்டுமா என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்….

தகவலறிந்து உடனடியாக வந்த வருவாய்த்துறையினரும் காவல்துறையினர் இந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்று மாலைக்குள் ஒரு நல்ல முடிவை கோட்டாட்சியரிடம் பேசிவிட்டு தெரிவிப்பதாக சொல்லியுள்ளனர்,,

READ  இப்போ தெரிகிறதா ஏன் திமுக பொன்மாணிக்கவேல், H ராஜாவை எதிர்த்தார்கள் என்று? நிலம் அபகரிப்பு திமுக முக்கிய புள்ளி

அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இந்நிலையில் இப்பகுதி மக்கள் நம்மிடம் கூறுகையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகவே இந்த பகுதியில் கிறிஸ்தவ கோயில் மட்டும்தான் இருக்கிறது அந்த கோவிலை தாண்டி எந்த கோவில் கட்டுவதாக இருந்தாலும் ஆட்களையும், அடியாட்களையும், ரவுடிகளையும், அதிகாரிகளையும் வைத்து கோவில் நிர்வாகத்தினர் கெடுத்துவிடுகின்றனர். இப்போது சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவு வாங்கி வந்தோம் மீண்டும் இன்று கோவில் கட்ட விடாமல் தடுக்கின்றனர், இதற்கு வேறு வழியே இல்லையா என்று இன்று போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறோம்,

பாதிரியார்கள் முற்றுகை
நாங்கள் இப்பிரச்சனையை சும்மா விடப்போவதில்லை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தமிழகத்தில் உள்ள இந்து அமைப்புகளையும் பொது மக்களையும் திரட்டி மாபெரும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போகிறோம் என்றும் அறிவித்துள்ளனர்,, அதிகாரிகளின் முடிவு சரியில்லை என்றால் மிகப் பெரிய மத கலவரம் உண்டாகும் சூழ்நிலை தஞ்சையில் ஏற்படும் என்பதில் மாற்றமில்லை…

நன்றி : Usha Sankar

சொந்த நாட்டில் இந்துக்கள் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் ஒரு கோவில் காட்டமுடியாது நிலைமையில் இருப்பது தமிழகம் எதை நோக்கி செல்கிறது என்ற வேதனையையும் ஒரு சேர எழுப்புகிறது.
உடனடியாக அரசாங்கம் தலையிடவில்லை எனில் கன்னியாகுமரி மண்டைக்காடு கலவரத்தை போல் இந்துக்களின் போராட்டம் திசை திரும்பும் அபாயமும் உள்ளது.

READ  துரைமுருகன் வெளியேற்றம் தேர்தல் முடிவுகள் நிறுத்திவைப்பு வேலூர் தேர்தலில் அதிரடி திருப்பம் !

சமூக நீதி பேசும் அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு வாய் திறப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here