காவி வேஷ்டி கூட பரவாயில்லை இவங்க என்ன அனுப்பிருக்காங்க பாருங்க? கடுப்பான எஸ் ஏ சந்திரசேகர்.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

காவி வேஷ்டி கூட பரவாயில்லை இவங்க என்ன அனுப்பிருக்காங்க பாருங்க? கடுப்பான எஸ் ஏ சந்திரசேகர்.

சென்னை.,

நடிகர் விஜயின் தந்தை சமீபகாலங்களில் சில கருத்துக்களை சொல்ல அது சர்ச்சையில் போய் முடியும் அளவிற்கு நீண்டுகொண்டே செல்கிறது.

சில நாட்களுக்கு முன்னர் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை மனதில் வைத்து இன்னும் 5 ஆண்டுகளுக்கு அனைவரும் காவி வேட்டி கட்டிக்கொண்டு அலையப்போகிறோம். அதில் தமிழ்நாடு மட்டும் தப்பித்துவிட்டது என்று கூறினார். இதனை பாஜக தேசிய செயலாளர் H ராஜா முதல் பலரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

Loading...

இந்நிலையில் இந்து அமைப்பை சேர்ந்த பலரும் சென்னையில் உள்ள சந்திரசேகர் முகவரிக்கு காவிவேட்டியினை அனுப்பி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில் மீண்டும் சந்திரசேகர் முகவரிக்கு பெயரில்லாத பார்சல் ஒன்று வந்துள்ளது. இதனால் அதனை வாங்க அவரது உதவியாளர் மறுத்ததுடன் பாதுகாப்பு காரணங்களை கருதி காவல் துறைக்கு தகவல் அளித்து அவர்களது முன்னிலையில் பார்சலை பிரித்தனர்.

READ  #breaking சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய அனைவரது பெயர்களும் வெளியானது மொத்தமும் கூட்டு களவாணிகள் பிரதமரை சந்திக்கும் பொன்மாணிக்கவேல் !

அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது இந்த முறை காவி வேஷ்டிக்கு பதில் காவி நிறத்திலான இரண்டு பாவாடைகளை அனுப்பியுள்ளனர். இதனால் கோபமடைந்த சந்திரசேகர் பார்த்தீங்களா சார் என்னத்த அனுப்பிருக்காங்கனு இப்படித்தான் அநியாயம் பண்றாங்க.

ஏதாவது ஒரு நடவடிக்கை எடுங்கள் என்று வற்புறுத்தியிருக்கிறார் அதனை தொடர்ந்து சந்திரசேகர் வீட்டின் பாதுகாப்பிற்கு இரண்டு காவலர்களையும் அடையாளம் தெரியாத பார்சல்கள் வந்தால் உடனடியாக தெரிவிக்குமாறும் காவல்துறையினர் கூறியிருக்கின்றனர்.

சந்திரசேகருக்கு பாவாடை அனுப்பிய விவகாரம் தற்போது இணையத்தில் படு கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.

©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here