இராணுவத்தை தவறாக பேசும் நீங்கள் லாட்ஜ் நடத்தி என்ன தொழில் செய்தீர்கள் பீட்டர் அல்போன்ஸை வெளுத்து வாங்கிய சசிகலா புஷ்பா!

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

மாநிலங்களவை எம் பி சசிகலா புஷ்பா காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸை வெளுத்து வாங்கி இருக்கிறார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்ட நிகழ்வை முன்வைத்து தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட பீட்டர் அல்போன்ஸ் இந்திய ராணுவ வீரர்கள் அங்குள்ள பெண்களை கற்பழிப்பதாக குறிப்பிட்டு பேசினார், இது ராணுவ வீரர்கள் மட்டுமின்றி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது, பலரும் பீட்டர் அல்போன்ஸை தொடர்பு கொண்டு கடுமையாக எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாநிலங்களவை எம் பி சசிகலா புஷ்பா கடுமையாக பீட்டர் அல்போன்ஸை சாடியுள்ளார். இது குறித்து அவர்வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :-

Loading...
READ  கமலுடன் இணையும் பனிமலர் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடி என்ட்ரி ?

வெட்கமாக இல்லையா மிஸ்டர் பீட்டர் அல்ஃபோன்ஸ்

ராணுவத்தினர் காஷ்மீரில் பெண்களை கற்பழிக்கிறார்கள் என டிவியில் பேச,சிந்திக்க எது உங்களை தூண்டியது? உங்கள் மதமா_ ??

கொடுங்குளிர், கடும்பனியில், உறைந்து சுட்டெரிக்கும் வெயிலில் உழன்று எதிரிகளிடமிருந்து நம்மை காத்து கொண்டிருக்கும் ராணுவவீரர்களை கொச்சைப்படுத்தி விட்டீர்களே*

தென்காசி,குற்றாலத்தில் நீங்கள் நடத்திய தங்கும் விடுதிகள் எத்தனை,அவற்றில் நடந்த தொழில் என்னவென்று_ உங்களால் கூற இயலுமா?

72 ஆண்டுகளாக தீர்க்க முடியாத பிரச்னையை, இதில் 60 ஆண்டுகள் உங்கள் காங்கிரஸ் ஆட்சி. வரலாற்று சாதனையாக சாதித்து முடித்திருக்கிறது மோடி தலைமையிலான பிஜேபி அரசு.

மாபெரும் நிகழ்வை தாங்க முடியாமல், மத கண்ணோட்டத்துடன் காழ்ப்புணர்வின் உச்சத்தில் உளறியுள்ளீர்கள்.

உங்கள் ஆட்சி காலத்திலும் ராணுவம் அப்படிதான் நடந்து கொண்டதா? எனில் நீங்கள் என்ன களை பறித்து கொண்டிருந்தீர்களா!??

READ  முதலில் பாகிஸ்தானை இந்தியாவிடம் இருந்து காப்பாற்றும் வேலையை பாருங்கள் காஷ்மீரை அப்பறம் பார்க்கலாம் இனியாவது திருந்துமா திமுக?

தன் சுய கோபத்திற்காக ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த உங்கள் தலைவி நேற்று பேசியிருக்கலாமே,ஏன் குலாம்நபி ஆசாத்தை பேசவிட்டு அமைதி காத்தார். உங்கள் ராகுல் கூட பேச துணியவில்லை!

கொல்லப்பட்ட தமிழர்களில் கிறிஸ்துவர்களும் உண்டு என்பதை அறிவீர்களா!?

தேசிய கட்சி போர்வையில், வெள்ளை பாவாடைக்குள் அரசியல் செய்வதை கைவிட்டு அங்கி மாட்டி கொண்டு பிரசங்கம் செய்ய போகலாம்

அரசியல் பதவிகள் மூலம் கோடிகளை குவித்த உங்களுக்கு, ராணுவ வீரர்களின் தியாகம் தெரிந்திருக்க நியாயமில்லை_

மோடியும் அமித்ஷாவும் செய்தது வரலாறு பேசும் சாதனை

நீங்கள் பேசியது வரலாற்றில் அழிக்க முடியாதவொரு வேதனை துடைக்க இயலாத கறை!

வருங்காலம் உங்களை காறி உமிழும்!

சசிகலா புஷ்பா MP
06.08.2019.

READ  "அல்லு விடுகிறதா" உலக லெவலில் ஹிட் அடித்த தம்பதியினர் ஹர்பஜன் ட்வீட்

©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here