திருமுருகன் காந்தியை மேடையில் தெறிக்கவிட்ட 5 ம் வகுப்பு மாணவி புல்லரிக்கவைத்த சிறுமியின் பேச்சு.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

பொருக்கி தேசம் என்று சொல்லிவிட்டு ஏன் இங்கே இருக்கிறாய் திருமுருகன் காந்தியை மேடையில் தெறிக்கவிட்ட 5 ம் வகுப்பு மாணவி புல்லரிக்கவைத்த சிறுமியின் பேச்சு.

தேவகோட்டை.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் சுதந்திர போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட விழா நிகழ்ச்சி ஒன்றிணை இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இவ்விழாவில் சுமார் 600 – ம் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். வழக்கம் போல் அல்லாமல் இந்த முறை பேச்சு போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு இரண்டு தலைப்புகள் கொடுக்கப்பட்டன. அதில் இந்தியாவுக்கு எதிரி யார்? மற்றும் இந்தியா யாருக்கு எதிரி என்ற தலைப்பில் பேச்சு போட்டியில் கலந்துகொண்டவர்கள் பேசினர்.

Loading...

அதில் தேவகோட்டையை சேர்ந்த சாதனா என்ற 5- ம் வகுப்பு பயிலும் சிறுமி பேசிய பேச்சு ராணுவ வீரர்களே எழுந்து நின்று பாராட்டும் விதத்தில் அமைந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்தியர்கள் அனைவருக்கும் இந்த சாதனாவின் வணக்கம்.

READ  #24INFO தோனியை தொடர்ந்து நாட்டிற்காக களத்தில் இறங்கினார் அஜித் கோவையில் முகாம் அமைத்து பயிற்சியில் ஈடுபடுகிறார் !

இன்று இந்தியா யாருக்கு எதிரி என்ற தலைப்பில் தமிழகத்தில் மக்களை குழப்பி கொண்டிருக்கும் சில அர்பன் மாவோயிஸ்ட்களை பற்றி பேச போகிறேன். என்று ஆரம்பித்தார் அதில் முதலில் திருமுருகன் காந்தி என்பவன் குறித்து இங்கு பேசுகிறேன் கேளுங்கள்.

இங்குள்ள இளைஞர்களில் சிலர் அவன் பேசிய பேச்சுக்களில் மயங்கி அவன் ஒரு அறிவில் சிறந்தவன் என்று நம்பியிருக்கலாம் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஒன்றை கூறுகிறேன். இந்தியா முழுவதும் ரேஷன் அரசி பொருட்களை இன்னும் 6 மாதத்திற்குள் மோடியின் அரசாங்கம் முழுவதும் நிறுத்திவிடும் என்று கூறினான். அதை கேட்ட இளைஞர்கள் பலரும் இந்திய அரசிற்கு எதிராக தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

பலர் திருமுருகன் காந்தி ஐ நா சபையில் பேசிய புகைப்படங்களை பகிர்ந்தனர். ஆனால் திருமுருகன் காந்தி சொல்லி இன்றோடு 4 வருடம் முடிந்துவிட்டது இன்றுவரை சிறப்பாக ரேஷன் பொருள்கள் திட்டம் தொடர்கிறது. இவனை போன்றவர்களுக்கு மக்கள் மனதில் நஞ்சை விதைத்து இந்திய திரு நாட்டிற்கு எதிராக ஒரு இனத்தை தயார் செய்து அதன்மூலம் இந்தியாவை துண்டாட வேண்டும் என்பதே குறிக்கோள்.

READ  சிவகங்கை மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிறதா? குஷியில் வாக்காளர்கள்

இந்தியாவை பொருக்கி தேசம் என்று சொல்லிவிட்டு இந்தியாவிலேயே தங்கி இந்திய சோற்றை திங்கும் மானம்கெட்ட ஜென்மங்களுக்கு என்று இந்திய சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்து உடனடியாக நாட்டை விட்டே துரத்த வேண்டும். இந்தியாவிற்கு எதிராக எவன் பேசினாலும் அவன் இந்திய நாட்டில் இருக்க தகுதி அற்றவன்.

இப்போது திருமுருகன் எனும் பெயர் கொண்ட அந்த நபர் இந்தியாவை மீண்டும் பொருக்கி தேசம் என்று சொல்ல சொல்லுங்கள் முதலில் விழும் அடி என்னை போன்ற பாரத தேசத்தில் இந்தியராக உள்ள குடும்பத்தில் பிறந்த அனைவராலும் விழும் என்று பேசினார்.
இந்தியா இந்தியாவை துண்டாட நினைப்பவர்களுக்குத்தான் முதல் எதிரி என்றும் நான் திருமுருகன் காந்தி போன்றவர்களை கேட்கிறேன்
1) இந்தியா பொருக்கி தேசம் என்றால் இங்கு ஏன் இருக்கிறாய்?

2) இப்போது உனக்கு தைரியம் இருந்தால் மேடைபோட்டு இந்தியாவை தமிழகத்தில் விமர்சனம் செய்ய தைத்தியமிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பி உரையை முடித்தார்.

READ  ஒரே ஒப்பந்தத்தில் சோழிய முடிச்சுட்டாரே மோடி கதறும் திருமுருகன் காந்தி ! இனி எல்லாம் சென்னைதான் !

இதை கேட்டுக்கொண்டிருந்த ஒட்டு மொத்த முன்னாள் ராணுவ வீரர்களும் எழுந்து சிறுமிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில் பேசிய காஷ்மீரில் பணியாற்றி ஓய்வு பெற்ற மேஜர் சுந்தர் அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளுக்கு நாட்டு பற்றை சொல்லி கொடுத்தால் சாதனா போன்று பல சாதனாகள் உருவாகுவார்கள். இந்த சிறு வயதில் குழந்தையின் தேசப்பற்றை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்தார்.

5 ம் வகுப்பு பள்ளி சிறுமி திருமுருகன் காந்தியை வெளுத்துவாங்கி இருப்பது தமிழக அளவில் தற்போது வைரலாகி வருகிறது.

©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here