எங்களை ஏமாற்றாதீர்கள் ஸ்டாலினை வறுத்தெடுத்த 5 ம் வகுப்பு மாணவி சாதனா இணையத்தில் தீயாக பரவுகிறது !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சிவகங்கை.,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தனியார் பள்ளியில் பயிலும் 5 ம் வகுப்பு பயிலும் மாணவி சாதனா திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் மற்றும் அதில் சொல்லப்பட்டிருக்கிற குறிப்புகள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

அன்புள்ள திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம் உங்களுக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு எனக்கு வயது இல்லை என்று எண்ணியிருந்தேன் ஆனால் 86 + 9 கூட்டணினால் 95 என வரும் என எனக்கு நன்றாக தெரியும் எனவே 97 என கூறிய உங்களுக்கு கடிதம் எழுதுவதில் எந்த தவறும் இல்லை.

Loading...

நான் இப்போது சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தனியார் பள்ளியில் பயின்று வருகிறேன் என்னுடைய ஊரில் இருந்து மட்டும் எங்கள் பள்ளியில் 14 மாணவர்கள் பயின்று வருகிறோம்.

அனைவரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள், வருடத்திற்கு எங்களது பெற்றோர்கள் 30 ஆயிரம் செலவு செய்து எங்களை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கின்றனர், எனது தந்தை இதே பள்ளியில் வாகன ஓட்டுனராக பணிபுரிகிறார். எனவே எனக்கு 5 ஆயிரம் குறைவு போக வருடம் 25 ஆயிரம் கட்டணம்.

READ  பொறிவைத்து பிடித்த வனத்துறை சிக்கியது சிறுத்தை

சரி உங்களிடம் கேட்பது ஒன்றுதான் ஆனால் மற்றவர்களை போல விவரம் தெரியாமல் கேட்கவில்லை, மத்திய அரசு சார்பில் அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் நவோதயா பள்ளிகளை ஏன் வரவிடாமல் தடுக்கிறீர்கள் ? பக்கத்து தமிழர்கள் மாநிலமான புதுசேரியில் நவோதயா பள்ளிகள் இருக்கிறது? அண்டை மாநிலங்கள் அனைத்திலும் இருக்கிறது ஏன் தமிழகத்தில் மட்டும் இல்லை.

நவோதயா பள்ளிகளால் பயன் பெற போவது உங்களை போன்ற பணக்கார குடும்பங்கள் இல்லை எங்களை போன்ற ஏழை நடுத்தர கிராமபுர மாணவர்களே, உங்களுக்கு மட்டுமல்ல நவோதயா பள்ளிகளை எதிர்க்கும் அனைத்து தமிழர்களையும் கேட்கிறேன் புதுசேரியில் நவோதயா பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்துவிட்டார்கள். ஆனால் தமிழக அரசு பள்ளியில் பயின்ற எத்தனை மாணவர்கள் தேர்வானார்கள் சொல்லமுடியுமா?

READ  சரவணா ஸ்டோர் உரிமையாளர் மனைவி யார் என்று தெரியுமா? அவருக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு !

ஹிந்தி பயின்றால் தமிழ் அழியும் என்று சொல்லி எங்களை இன்னும் ஏமாற்றாதீர்கள், இந்தி படித்தால் உங்கள் குடும்பம் அழியும் என்று சொல்லுங்கள் அதுதான் சரியாக இருக்கும். தமிழர்களை வாழவிடுங்கள் யார் என்ன படிக்க வேண்டும் என்பது அவர்களது உரிமை தயவு செய்து மாணவர்கள் எங்களது வாழ்க்கையில் தலையிடாதீர்கள். நாளை நானும் எனது தம்பியும் என்னை போன்றவர்களும் நவோதயா பள்ளியில் பயிலும் வாய்ப்பை கெடுத்து உதயநிதி மகனும், மகளும் மட்டும் முன்னேறும் வாய்ப்பை ஏற்படுத்தாதீர்கள் ! நன்றி.

இது கேரளாவில் கூடுதல் நவோதயா பள்ளிகள் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவிட்டு தமிழகத்தில் நவோதயா பள்ளிகளே கூடாது என்று குரல் கொடுக்கும் கம்யூனிஸ்ட் திருட்டு தனத்திற்கும் பொருந்தும்.

B. சாதனஸ்ரீ.

இவ்வாறு சாதனா என்ற சிறுமி ஈமெயில் மூலம் கடிதம் எழுதி அதனை திமுக தலைவர் ஸ்டாலின், மற்றும் தமிழக ஊடகங்களுக்கும் 17 /07/19 அன்று மாலை 5.30 மணிக்கு அனுப்பியுள்ளார் அதன் பிரதியை இங்கு பதிவிட்டுள்ளோம். மேலும் வரும் வாரங்களில் வீடியோ பதிவு வெளியிடுவதாகவும் கூறியுள்ளார்.

READ  பாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு !

சமூக போராளிகள் என்ற போர்வையில் மத்திய அரசை விமர்சனம் செய்யும் போராளிகளுக்கு மத்தியில் சிறுமி சாதனா தனக்கு தேவையான அரசியலை கற்று பேசுவது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. இதற்கு முன்னர் மேடை பேச்சில் இந்தியாவை பொருக்கி தேசம் என்று கூறிய திருமுருகன் காந்தியை வெளுத்து வாங்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here