விஜய்சேதுபதிக்கு ஆதரவாக பேச போயி SG சூர்யாவிடம் வாங்கி கட்டிக்கொண்ட திமுகவினர் பதில் இருக்கிறதா?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சமூகவலைத்தளம்.,

காஷ்மீர் விவகாரம் நாடு முழுவதும் அமைதியாகி வரும் நிலையில் அதை தமிழகத்தில் மீண்டும் கொளுத்தி போட்டிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி காஷ்மீர் மாநிலத்தை பிரித்த முடிவினை அந்த மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் அதைத்தான் பெரியார் குறிப்பிட்டார் என்று சொல்லி இருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் வழக்கம்போல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக முட்டுக்கொடுக்க ஆரம்பித்தனர், இந்நிலையில் பாஜக இளைஞர் அணி துணை தலைவர் SG சூர்யா விஜய்சேதுபதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த திமுக எம் எல் ஏ P தியாகராஜனை ட்விட்டரில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் தெரிவித்தகருத்து பின்வருமாறு

Loading...
READ  நான் தமிழன் இல்லையா வீரமணிக்கு பொளேர் பதிலடி கொடுத்த பாண்டே ! சிறப்பான சம்பவம். ட்ரைலர் இருப்பதாகவும் எச்சரிக்கை

ஒரு அந்நிய நாட்டில் நமது உள்நாட்டு விவகாரத்தை குறித்து பிதற்றியிருப்பதை கைக்கட்டி ரசிக்கிறது தி.மு.க & @ptrmadurai ! என்ன ஒரு இழி செயல்? இந்திய நாட்டின் மீது வெறுப்பு இருக்கிறது என்பதற்காக இது போன்ற கேடுகெட்ட செயல்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது தி.மு.க நிறுத்த வேண்டும்.

விஜய் சேதுபதிக்கு இந்திய அரசின் முடிவுகளை எதிர்த்து கருத்து சொல்ல முழு உரிமை உண்டு. சொன்ன இடம் தான் சர்ச்சை. ஆஸ்திரேலியாவில் அந்நாட்டு வானொலியின் கேள்விக்கு “இது இந்திய உள்நாட்டு விவகாரம் இது குறித்து அந்நிய மண்ணில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்று கூறியிருந்தால் மானஸ்தன்.

நம் நாட்டின் உள்விவகாரங்களை அடுத்த நாட்டில் வைத்து பேசிய விஜய்சேதுபதியின் நாட்டு பற்றையும் அவரது செயலுக்கு ஆதரவு தெரிவித்த திமுகவினரின் நிலைப்பாட்டையும் நேரடியாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் சூர்யா.

READ  வெளியுறவுத்துறை நடவடிக்கை கைது நடவடிக்கை தீவிரம்.

அந்த அந்த மக்கள் தான் அவர்களின் நிலையை தீர்மானித்து கொள்ளவேண்டும் என்றால் ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கடவுள் நம்பிக்கையற்ற பெரியார் பேரன் விஜய் சேதுபதி ஏன் இந்துமக்களின் நம்பிக்கை குறித்து கருத்து சொல்லவேண்டும் என்ற எதிர் கருத்தும் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here