ப.சிதம்பரம் வழக்கில் நடந்தது என்ன? புட்டு புட்டு வைக்கும் எஸ்.ஜி.சூர்யா!!

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

ப.சிதம்பரத்தை ஏன் கைது செய்ய வேண்டும்?, ஐ.என்.எக்ஸ் பண மோசடியில் நடந்தது என்ன? இதில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு என்னென்ன தொடர்ப்பு ஆகியவற்றை விரிவாக விவரித்துள்ளார் பாஜக மாநில இளைஞரணி துணைத்தலைவர் எஸ்.ஜி.சூர்யா.

இதுதொடர்பாக எஸ்.ஜி. சூர்யா கூறியதாவது:-

ஐ.என்.எக்ஸ் என்ற நிறுவனம், மொரிசியசில் இருந்து இன்வெஸ்ட்மென்ட் வாங்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெளி நாட்டு நிதி ஊக்க கழகத்திற்கு (FIPB) என்ற அமைப்புக்கு விண்ணப்பிக்கிறது.

Loading...

மொரிசியசில் இருந்து ஒருவகையில் 14 லட்சம் பங்குகளும் மற்றொருவகையில் 31 லட்சம் பங்குகள் மூலம் (ஒவ்வொரு பங்கின் மதிப்பு 10 ரூபாய்) 4 கோடியே 62 லட்சம் ரூபாய் முதலீடு கொண்டு வருவதற்காக அவர்கள் விண்ணப்பித்தார்கள்.

விண்ணப்பிப்பதற்கு முன்னரே, அவர்கள் தங்களின் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை 305 கோடி ரூபாய்கு விற்பனை செய்துள்ளனர். அந்த பணத்தை இந்தியாவிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் இந்திய உள்துறையில் விண்ணப்பித்தார்கள். அப்போது வருமான வரித்துறையிலுள்ள அதிகாரிகள் இதை கண்டுபிடித்தார்கள். முன் அனுமதி பெறாமல் 305 கோடி ரூபாயை இந்தியாவிற்கு கொண்டு வந்தது தெரிய வந்தது.

READ  திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியது யார் ஆண்ட்ரியா விளக்கம் ! குறும்படத்திற்கே குறும்படமா?

எனவே அதனை ரத்து செய்துவிட்டு பின்னர் நடைமுறை படுத்தலாம் என்று ஒரு பரிந்துரையை அனுப்பினார்கள்.

இதனால் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பீட்டர் முகர்ஜியும், இந்திராணி முகர்ஜியும், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை அணுகினார்கள். அவரிடம் இதில் உள்ள பிரச்சினை குறித்து விவரித்துள்ளனர். இந்த பிரச்சினையை முடித்து கொடுக்க முடியுமா என்று கேட்டுள்ளனர்.

இந்த தகவலை இந்திராணி முகர்ஜி, பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி சி.பி.ஐயிடமும், மாஜிஸ்ரேட்டிடமும் வாக்கு மூலமாக கொடுத்துள்ளார்.

அப்போது, பாம்பே ஹோட்டலில் நாங்கள் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்து, இந்த பிரச்சினையை முடித்து கொடுக்கும்படி கேட்டோம். அவர் அதற்கு சம்பளமாக 10 லட்சம் டாலர் கேட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

அந்த பணத்தை அட்வான்டேஜ் ஸ்டேட்டஜி கன்சல்டிங் என்ற நிறுவனத்திற்கு அனுப்பி உள்ளனர். இதில் கார்த்தி சிதம்பரத்தை ஏன் கைது செய்தார்கள் என்றால், அட்வான்டேஜ் ஸ்டேட்டஜி கன்சல்டிங் நிறுவனத்தில் கார்த்தி சிதம்பரத்திற்கு பங்கு இல்லை. ஆனால், அந்த நிறுவனத்தின் கட்டுபடுத்தும் நிறுவனமான ஹாட்பிட் ரோல்டிங் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லமிடெட் முக்கால் வாசி பங்குகள் கார்த்தி சிதம்பரத்திடம் 2006 – இல் இருந்து 2017 வரை இருந்துள்ளன.

2011-இல் சிதம்பரத்தின் அசோசியேட்டான மோகன ராஜேஷ் என்பருக்கு, ஹாட்பிட் ரோல்டிங் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லமிடெட் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் மாற்றிவிட்டுள்ளனர்.

READ  இந்தியாவா இல்லை பாகிஸ்தானா சிவன் கோவிலை நாசம் செய்தவர்களை கைது செய்யக்கோரி இந்தியா முழுவதும் வலுக்கும் போராட்டம் !

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் இயக்குனராகவோ அல்லது பங்குதாரராகவோ இல்லாதபோது ஏன் கைது செய்தார்கள் என்றால், 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கார்த்தி சிதம்பரம் வீட்டில் நடந்த சோதனையில் 5 உயில்களை சி.பி.ஐ. கண்டுபிடித்தது.

பாஸ்கர் ராமநாதன், சி.பி.என்.ரெட்டி, எம்.ராஜேஷ், ரவி விஸ்வநாதன், பத்மா விஸ்வநாதன் ஆகிய 5 பேரும் எழுதி கொடுத்துள்ள உயிலில், ஹாட்பிட் ரோல்டிங் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லமிடெட் நிறுவனத்தின் எங்களுக்கு உரிய 60 சதவீத பங்குகளை எங்களின் இறப்பிற்கு பிறகு கார்த்தி சிதம்பரத்தின் மகளான அதிதி சிதம்பரத்திற்கு பரிசாக கொடுக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அந்த உயில்களில் இதை மட்டும் குறிப்பிடவில்லை. அவர்கள் சம்பாதித்த பணம், சொத்துக்கள் எல்லாம் அவரவர் வாரிசுகளுக்கு சேரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த பினாமி நிறுவனத்தின் பங்குகள் மட்டும் எங்களின் இறப்பிற்கு பிறகு அதிதி சிதம்பரத்திற்கு சேரும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் நடந்த அதே சோதனையில் ஹார்டு டிஸ்க் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் அவரின் வெளிநாட்டு முதலீடுகள், உள் நாட்டு முதலீடுகள் உள்பட ஏராளமான தகவல்கள் இருந்ததை சி.பி.ஐ கண்டுபிடித்துள்ளது.

இதை ஒரு விஞ்ஞான ஊழல் என்று சொல்லலாம். 10 லட்சம் டாலர் இவர்களின் நிறுவனத்திற்கு பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்களையும் கைப்பற்றி உள்ளனர்.

READ  இனி வாட்சப் பேஸ்புக் இலவசமில்லை மாதகட்டணம் எவ்வளவு செலுத்தவேண்டும் முழு விவரம் உள்ளே ! அதிர்ச்சியில் பயனர்கள்

எனவே இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்பு உள்ளது என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகி உள்ளது. ஆகவேதான் அவரை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் சட்டத்திற்கு புறம்பாக 305 கோடி ரூபாயை இந்தியாவிற்குள் கொண்டு வந்ததற்கு எந்த நடவடிக்கையும் அப்போதைய நிதித்துறை எடுக்கவில்லை.

இதில்தான் அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருந்துள்ளது என்பது திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவேதான் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை பாய்ந்து உள்ளது.

இந்த தகவல்களையும் இந்திராணி முகர்ஜி தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு பாஜக மாநில இளைஞர் அணி துணை தலைவர் சூர்யா பலருக்கும் புரியும் வண்ணம் வழக்கின் முக்கிய குறிப்புகளை பொது தளத்தில் வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here