சிக்கிமிலும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக…10 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

சிக்கிம் மாநில அரசியலில் திடீர் திருப்பமாக எஸ்.டி.எப் கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் நேற்று பாஜகவில் இணைந்தனர். இதனால் பாஜக அந்த மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக மாறுகிறது.

வடகிழக்கு மாநிலமான சிக்கிம் சீனா, பூடான், நேபாளம் ஆகிய நாடுகளின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால் முக்கிய மாநிலமாக கருதப்படுகிறது.சிக்கிம் மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் சிக்கிம ஜனநாயக முன்னணி (எஸ்.டி எப் ) கட்சி, மற்றொரு மாநில கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம் ) என்ற கட்சியிடம் தோல்வியடைந்தது. அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 32 சட்டமன்ற தொகுதிகளிலும் எஸ்.டிஎப். கட்சி 15 தொகுதிகளிலும், எஸ்.கே.எம் கட்சி 17 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன.

READ  தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் இவர்தான்!

எஸ்.டி எப் கட்சியின் தலைவர் பவன்குமார் சாம்லிங் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 25 வருடங்கள் மணிலா முதல்வராக இருந்தவர்.அவரது கட்சியில் 2 பேர் தலா 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால் அவர்கள் தலா ஒரு தொகுதியை ராஜினாமா செய்தனர்.எனவே அக்கட்சி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 13 ஆக உள்ளது.

மாநில அரசியலில் திடீர் திருப்பமாக அந்த 13 பேரில் 10 எம்.எல்.ஏக்கள் நேற்று டெல்லியில் பாஜக பொதுக் செயலாளரும்,வடகிழக்கு பிராந்திய பொறுப்பாளருமான ராம்.மாதவ் முன்னிலையில் பாஜகவில் அடிப்படை உறுப்பினர்களாக இணைந்தனர். இதனால் அந்த மாநிலத்தில் பாஜக முக்கிய எதிர்க்கட்சியாக மாறுகிறது. பின்னர் 10 பெரும் பாஜக செயல் தலைவர் ஜெ.பி.நட்டாவையும் சந்தித்தனர்.விரைவில் அங்கு 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அந்த தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...
READ  காலில் விழுந்த ரகசிய வீடீயோவை வெளியிட்ட பாஜக ! திமுகவிற்கு பதிலடி

எஸ்.டி.எப்.கட்சி முன்பு பாஜக கூட்டணியில் இருந்தது. பின்னர் அந்த இடத்தை எஸ்.கே.எம். கட்சி பிடித்து கொண்டது. பாஜக தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக கூட்டணியில் எஸ்.கே.எம். இடம்பெறவுள்ளது. பாஜகவில் இணைந்த 10 எம்.எல்.ஏக்களும் கூறுகையில், பாஜக வடகிழக்கு மாகாணங்களின் வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்துவதால் அக்கட்சியில் இணைந்ததாக தெரிவித்தனர்.சிக்கிம் மாநிலத்தில் அடுத்து பாஜக ஆட்சி அமைக்கும் என அவர்கள் கூறினார்கள். ராம் மாதவ் கூறும்போது சிக்கிம் தவிர அணைத்து வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக தனித்தோ அல்லது மாநில கட்சிகளின் கூட்டணியுடனோ ஆட்சியில் உள்ளது. இந்த இணைப்பு நடவடிக்கையின் மூலம் சிக்கிம் மாநிலத்திலும் ஆளும்கட்சிக்கு மிகவும் நெருக்கமாக கட்சியாக பாஜக மாறும் என்றார். சிக்கிம் முதல்மந்திரியாக பிரேம்சிங் தமங் உள்ளார். அவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ இல்லை.

READ  மக்களவையில் முதல் கேள்வியிலேயே அசிங்கப்பட்ட கனிமொழி ! விளாசி எடுத்த பியூஸ் கோயல் !

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here