பிரசன்னாவை தொடர்ந்து சிக்கினார் சிம்லா முத்துசோழன் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சென்னை.,

திமுக தலைவர்கள் இந்த மாதம் தொடர்ச்சியாக சிக்கலில் சிக்கி வருகின்றனர், அதற்கு சிறு உதாரணம் சில நாட்களுக்கு முன்னர் திமுக பேச்சாளர் பிரசன்னா குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. விடியோ குறித்து கருத்து தெரிவித்த பிரசன்னா வீடியோவில் இருப்பது நான் இல்லையென்றும் அது வேண்டாத சிலர் பரப்பிய பொய் செய்தி என்றும் கூறி மறுத்தார்.

இதற்கிடையில் திமுக இந்தியை திணித்தால் கடுமையாக எதிர்க்கும் என்று கூறி ஸ்டாலின் கடுமையாக பிரச்சாரத்தை முன் மொழிந்த நேரத்தில் தற்போது ஸ்டாலின் வீசிய பந்து திமுக நோக்கியே திரும்ப தொடங்கியுள்ளது. குறிப்பாக ஸ்டாலின் மகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பயிலும் பள்ளிகளில் மட்டும் ஹிந்தி கத்து கொடுக்கப்படுகிறது.

Loading...
READ  திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சுந்தர் பிச்சை வைத்த ஆப்பு ! புலம்பும் திமுகவினர்.

அதோடு நில்லாமல் திமுகவினர் 45 இந்தி கற்றுக்கொடுக்கும் பள்ளிகளை நடத்தி வருவதாக ஆதரத்துடன் பாஜக தேசிய செயலாளர் h ராஜா மற்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் ஆதாரத்தை வெளியிட்டனர்.

இதனால் எங்கு சென்றாலும் திமுகவினரால் விவாதத்தில் பேச முடியவில்லை போதாத குறைக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து R. K நகரில் களம் கண்ட சிம்லா முத்துசோழன் தனது முகநூல் பக்கத்தில்
தனது மகன் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டான் என்று தனது மகனின் கல்வி சான்றிதழை பதிவிட்டிருந்தார்.

Source – simla muthuchozhan FB POST


இந்த தகவலை பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் திமுகவினர் குழந்தைகள் இந்தி கற்கலாம், ஏழை எளிய மக்கள் படிக்கக்கூடாதா என்று கேள்வி எழுப்பினர். இது குறித்த பதிவினை நீக்க சொல்லி திமுக தலைமையே சிம்லா முத்து சோழனுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதால் அவரும் கடும் சிக்கலில் சிக்கி இருக்கிறார்.

READ  சமூகவலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் ஜெயில்...மத்திய அரசின் அடுத்த அதிரடி

தற்போது இவை அனைத்தும் திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று எதிர்முகாமை சேர்ந்த அரசியல்வாதிகள் முன்வைக்கும் தகவலை, பொது மக்களும் பேச ஆரம்பித்துள்ளனர்.

ஸ்டாலின் குடும்பத்தினர் இந்தி படிக்கலாம், இவர்கள் பிழைப்பிற்காக இவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி சொல்லி கொடுக்கலாம் ஆனால் எழை, நடுத்தர மக்கள் படிக்க கூடாத என இப்போது பலரும் எதிர்கேள்வி எழுப்பி திமுகவினரை திக்குமுக்காட வைக்கின்றனர்.

எப்படியும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி முன்னர் திமுக ஆட்சியை பிடித்ததுபோல் இப்போதும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது அது கனவாகவே முடிந்துள்ளது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

READ  கம்யூனிஸ்ட் கட்சியினர் அராஜகம் கைது செய்யப்படுவார்களா? வீடியோ வெளியான நிலையிலும் மூடி மறைக்கும் தமிழக ஊடகங்கள்

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here