கண்கலங்கிய மகள் !புகைப்படத்தை நீக்கினார் ஸ்மிருதி இராணி

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்


கண்கலங்கிய மகள் !புகைப்படத்தை நீக்கினார் ஸ்மிருதி இராணி

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஸ்மிருதி  இரானி, தன்னுடைய  இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து அவருடைய மகளின் சமீபத்திய  புகைப்படத்தை நீக்கியிருக்கிறார்.

ஸ்மிருதிஅவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளான சோயிஷ் இரானியின் புகைப்படத்தை சில தினங்களுக்கு முன்  பதிவிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்தில் சோயிஷ் இராணி  பார்ப்பதற்கு அழகாக இல்லை என்று அவருடைய வகுப்பில் படிக்கும் மாணவன்  ஒருவன்  அவரைக் கிண்டல்  செய்திருக்கிறான் . அது மட்டுமல்லாமல்  அவருடைய நண்பர்களையும் உடன் அழைத்து சோயிஷை  கிண்டல்  செய்ய வைத்திருக்கிறான் . இதனால் மனமுடைந்த சோயிஷ், தன் அம்மா ஸ்மிரிதியிடம்  அந்தப் புகைப்படத்தை நீக்குமாறு கண்ணீர் விட்டு  அழுதிருக்கிறாள் .

READ  சுயமரியாதை பெரியார் மண்ணில் இருந்து வந்திருக்கிறேன் அப்போ வெளிய போங்க விரட்டி விட்ட அர்னாப் பாதியில் வெளியேறிய பரிதாபம் வீடியோ இணைப்பு

இது குறித்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருந்த  ஸ்மிரிதி,  சில தினங்களுக்கு முன்  எனது அன்பு மகளின் செல்ஃபி படத்தை என் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தேன். அந்தப் புகைப்படத்தை நேற்று நான் நீக்கிவிட்டேன். அதற்குக் காரணம் என் மகளை அவள் வகுப்பில் படிக்கும் ஒரு முட்டாள் அவள் உருவத்தைவைத்து  கேலி செய்துவிட்டான்.  இதனால் மனமுடைந்த என் மகள் புகைப்படத்தை நீக்குமாறு  கேட்டுக் கொண்டதால் அந்தப் புகைப்படத்தை நான் நீக்கிவிட்டேன். அவளுடைய கண்ணீரை என்னால் என்றும்  ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

Loading...

என் மகள் ஒரு விளையாட்டு வீராங்கனை. கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறாள். இது மட்டுமின்றி  சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு கராத்தே பிரிவில்  வெண்கலப் பதக்கமும் வாங்கியிருக்கிறாள். அவள் என்றும் அன்பானவள் மட்டுமல்ல மிகவும்  அழகானவளும்கூட. உங்களால்என் மகளை  எவ்வளவு முடியுமோ அவ்வளவு  கேலி செய்து கொள்ளுங்கள். அவள் அதை எதிர்த்து நிற்பாள். அவளைப் பெற்றதற்காக நான் ஒரு தாயாக  பெருமை கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

READ  துணை முதல்வராகிறாரா அன்புமணி ராமதாஸ்? திமுகவை சமாளிக்க எடப்பாடி பழனிசாமியின் அதிரடி வியூகம்

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் இலவசமாக பெற உங்களது whatsapp எண்ணில் இருந்து ACT FREE என்று 9962862140 என்ற எண்ணிற்கு வாட்சாப் செய்யவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here