துர்கா ஸ்டாலின் காட்டுமிராண்டியா? இல்லையா? பிரசன்னா என்ன தொக்கா? செய்தியாளர் கேட்ட 7 கேள்வி தெறித்து ஓடிய சுபவீரபாண்டியன்.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சென்னை.,

தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட சுபவீரபாண்டியன் நெறியாளர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் வாயடைத்து போன சம்பவம் நடந்துள்ளது அதிலும் அவர் கேட்ட முக்கிய 5 கேள்விகள் ஒவ்வொரு நாத்திகருக்கும் சவுக்கடியாக அமைந்துள்ளது.

கடவுளை கற்பித்தவன் முட்டாள், வணங்குபவன் காட்டுமிராண்டி என்று பெரியாரிஸ்ட்கள் கூறி வருகிறீர்கள், அனைத்து பெரியார் சிலைகளின் கீழும் அதுதான் எழுதியுள்ளது அப்படி பார்க்கையில் அத்தி வரதர் உள்ளிட்ட இந்து கடவுள்களை வணங்கும் துர்கா ஸ்டாலின் யார் காட்டு மிராண்டிதானே என்று நெறியாளர் கேள்வி கேட்க ஒரு நிமிடம் வாயடைத்து போனார் சுபவீரபாண்டியன்.

ஒரு நிமிடம் எந்த பதில் சொல்வது என்று குழப்பத்தில் பழைய வரலாறுகளை சொல்லி ஒரு சப்பைக்கட்டு ஒன்றிணை கட்டினார்.

READ  குறித்து வைத்து கொள்ளுங்கள் அடுத்து இந்தியாவில் அதிபர் ஆட்சி ! பாஜகவின் அடுத்த அதிரடி

திமுக தலைமை அமைப்பிற்கு சாதாரண தொண்டர் வரமுடியுமா என்ற கேள்வியை கேட்டார் மேலும் தமிழன் ப்ரசன்னாவிற்கு உள்ள ஆளுமையும் திறமையும் உதயநிதிக்கு உள்ளதா என்று கேள்வி கேட்க அதைப்பற்றி ஊடகங்களும், மற்றவர்களும் ஏன் கவலைப்படணும் இது திமுக உள்விவகாரம் என்று பதிலளித்தார்.

அப்படி என்றால் இந்து மதம் இந்துக்களின் தனி உரிமை அதில் மதமே இல்லை என்று சொல்கிற உங்களுக்கு என்னவேலை என்று கேட்க ஒரு நிமிடம் சுபவீக்கு வேர்த்து விட்டது.

அத்திவரதர் எழுந்து நிற்பாரா என்று வீரமணி கேள்வி கேட்டார், அதுபோல் இறந்து போன பெரியாருக்கு எதுக்கு மூக்கு கண்ணாடி, தடி கீழே விழுந்து விடுவாரா என்ற கேள்வியையும் கேட்க இது போன்று சமூகவலைத்தளங்களில் பேசுபவர்கள் பேசிக்கொள்ளட்டும் என்று மழுப்பலாக பதில் சொன்னார்.

READ  சாப்பாடு விலை வெறும் 50 ரூபாய் தான் மிச்சம் வைத்தால் அபராதம் எவ்வளவு தெரியுமா?

பாஜகவை எதிர்ப்போம் என்று சொன்ன திமுக இப்போது NIA மசோதாவிற்கு ஆதரித்து வாக்களித்துள்ளது, இதுபோல் தானே ஹைடிரோகார்பன் மீத்தேன் என அனைத்திற்கும் திமுக தனது ஆட்சி காலத்தில் அனுமதி அளித்துவிட்டு வெளிவேஷம் போடுகிறது என்று கேட்க அது தவறு, இதுகுறித்து திமுக தெளிவு படுத்தவேண்டும் என்று ஒதுங்கி கொண்டார்.

மொத்தத்தில் நெறியாளர் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் கடவுள் மறுப்பு கொள்கை பேசி குறிப்பிட்ட முறையில் இந்து மதத்தினை மட்டும் விமர்சிப்பவர்களுக்கு ஒரு வகையில் கடும் சவுக்கடியாகதான் அமைந்துள்ளது.

கேள்விகளை கேட்ட நெறியாளருக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

READ  மதுரை அரசு மருத்துவமனையிலிருந்து சரக்கு வகணங்களில் அனுப்பப்படும் நோயாளிகள் வெளியான அதிர்ச்சிகர உண்மை?
Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here