வெளியானது தற்கொலைசெய்துகொண்ட மோனிஷாவின் மதிப்பெண் சான்றிதழ் உயிரியலில் எத்தனை மதிப்பெண் தெரியுமா ?

0

விழுப்புரத்தை சேர்ந்த மாணவி மோனிஷா நீட் தேர்வில் தான் எதிர்பார்த்த அளவு மதிப்பெண் பெறாததால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார் .

அவர் தனது தந்தைக்காக எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாக நிலையில் இப்பொது அந்த மாணவியின் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வெளியாகியுள்ளது .

அந்த மாணவி 12 ஆம் வகுப்பில் 690 /1200 மதிப்பெண் பெற்றுள்ளார் மேலும் உயிரியல் ( பயாலஜி ) பாடத்தில் 86 /200 மதிப்பெண் பெற்றுள்ளார் மோனிஷா

நீட் தேர்வு இல்லாமல் இருந்தாலும் மதிப்பெண் அடிப்படையில்
1150 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றால் தான் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கும்

ஆனால் மோனிஷா வெறும் 690 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ள நிலையில் மருத்துவராவது நிச்சயம் முடியாது ,

இருந்தும் தன்மைபிக்கையை கைவிடாமல்
நீட் பயிற்சி பெற்றுவந்த நிலையில் அதில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துள்ளார்

ஆனால் இதை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் நீட் தேர்வால் தான் மோனிஷா மருத்துவராக முடியாமல் போனது என்று வெறுப்பு அரசியலை பரப்பி வருகின்றனர் .

ஒருவேளை நீட் இல்லை என்றாலும் , மோனிஷாவிற்கு மருத்தவ கல்லூரியில் இடம் என்பது எட்டா கனி தான் ,

இதுமட்டுமே வாழ்க்கை அல்ல வாழ்க்கை என்பதில் நிறைய உள்ளது தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல என்று அந்த மாணவிக்கு தன்னம்பிக்கை கூறாமல்

படிப்பு படிப்பு என்று மட்டுமே கூறி அந்த மாணவியை வெளியுலகில் தொடர்பு இல்லாமல் வளர்த்தது அந்த மாணவியின் பெற்றோரின் தவறே என்று கல்வியாளர் ஜெய்ஷ்ங்கர் கூறியுள்ளார் .

மாணவி மோனிஷா 2018 – ம் ஆண்டே 12-ம் வகுப்பு முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here