தமிழக சினிமா தியேட்டர்களில் ஸ்னாக்ஸ் கட்டணம் நிர்ணயம் – பெற்றோர்கள் மகிழ்ச்சி

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

தூத்துக்குடி:-

தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் விற்கப்படும் தின்பண்டங்களுக்கு விரைவில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் திட்டமிட்டு வகுக்கப்பட்டது. அவருடைய பயணம் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த நாடுகளுக்குச் செல்கிறார், எந்தெந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார் என அனைத்தும் ஊடகங்கள் வாயிலாக அனைத்து மக்களும் பார்த்துக் கொண்டுள்ளனர். மு.க.ஸ்டாலின் பலமுறை வெளிநாடுக்குச் சென்றிருக்கிறார். அதுபற்றி என்றைக்காவது ஊடகத்தில் வந்திருக்கிறதா? எதற்காக வெளிநாடு சென்றார்? என்று அவர் தான் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். எதிர்க்கட்சித் தலைவரும் அரசின் ஒரு பங்குதான்.

Loading...
READ  என்னது A FOR ஆதாம் B FOR பைபிளா தலைமை ஆசிரியருக்கு சிறப்பான தண்டனை வச்சாங்க ஆப்பு ! தமிழகத்திலா இப்படி ஒரு மாற்றம்

லண்டனில் உள்ள தமிழர்கள், தொழில் நிறுவனங்கள், அங்குள்ள மருத்துவமனை நிர்வாகிகள், தொழில் முதலீட்டாளர்கள் ஆகியோரை முதல்வர் சந்தித்தார். அங்கு உள்ளதைப் போல மருத்துவமனை ஏர்ஆம்புலன்ஸ் வசதி விரைவில் தமிழகத்தில் ஏற்படுத்தி, வெளிநாட்டுக்கு இணையான மருத்துவ வசதியை கொண்டு வர வேண்டும் என்று முயற்சி எடுத்துள்ளார். இவை அனைத்தும் வெளிப்படையாகத்தான் நடக்கிறது. இதில் என்ன மர்மம் இருக்கிறது எனத் தெரியவில்லை. அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் யாரும் நீடித்ததாக வரலாறு இல்லை.

திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த பல விதிமுறைகளை வகுத்துள்ளோம். திரையரங்கு கட்டணங்களை ஒழுங்குபடுத்தியுள்ளோம். வாகன நிறுத்துவதற்கான கட்டணமும் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களின் தரக்கட்டுப்பாடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திரையரங்குகளில் விற்கப்படும் தின்பண்டங்களுக்கும் விரைவில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.

READ  கல்யாணம் வரை சென்று, ரத்தான பிரபல நடிகரின் திருமணம்...பல உலகில் பரபரப்பு

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here