இந்தியை விரும்பி படிக்கும் மாநிலங்களில் தமிழகத்திற்கு முதலிடம் வெளியானது ரிப்போர்ட்

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

சமீபத்தில் இந்திய கல்வியை மேம்படுத்த அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

அதில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை 3 ஆவது மொழியாக கொண்டு வரலாம் என்ற பரிந்துரை இடம்பெற்றிருந்தது. அதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவானது.

இந்நிலையில் மகாத்மா காந்தியால் தென் மாநிலங்களில் ஹிந்தியை பரப்ப உருவாக்கப்பட்ட தக்சினா பாரத் ஹிந்தி பிரச்சார சபா ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் ஹிந்தி பேசாத தென் மாநிலங்களில் தாமாக முன்வந்து ஹிந்தியை கற்கும் மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் ஹிந்தி தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டிற்கு 5 .8 லட்சமாக உள்ளது. அதுவே தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 2 .8 லட்சமாகவும், கர்நாடகாவில் 62 ஆயிரமாகவும், கேரளாவில் 21 ஆயிரமாகவும் உள்ளது.

READ  மோடி தான் கெத்து மாணவர்கள் முன்னிலையில் வெளுத்துக்கட்டிய பாண்டே ! கடும் கோபத்தில் அந்த கட்சி?

கடந்த 2009 -ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆண்டிற்கு 2 .8 லட்சம் பேர் ஹிந்தி தேர்வு எழுதிய நிலையில் தற்போது அது 2 மடங்காக உயர்ந்துள்ளது.

என்னதான் திமுக உள்ளிட்ட கட்சிகள் ஹிந்தி எதிர்ப்பு என்று பேசினாலும் தமிழகத்தில் ஹிந்தி பயில்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் கூடுதலாக ஹிந்தி கற்பதை விரும்புகின்றனர் என்றே ஆய்வு முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here