நாடகமாடி தங்கள் குடும்ப ஊடகங்களை வைத்து மக்களை ஏமாற்றும் திமுக – தமிழிசை பதிலடி

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

தமிழக பாஜக தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அதில் நாடாளுமன்றத்தில் திமுக என்ன செய்கிறது எப்படி பொய் வாக்குறுதிகளை கூறி வெற்றிபெற்றது என்று கூறியுள்ளார்.

பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்களிடம் மனு கொடுப்பதும் ,சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற கூட்டத்தொடரின்போது அமைச்சர்களிடம் மனு கொடுப்பதும் ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் வழக்கமான நிகழ்வுகள்தான் ஆனால் திண்டுக்கல்லில் பேசிய திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 37 பாராளுமன்ற உறுப்பினர்களும்,பாராளுமன்றத்தில் என்ன செய்ய போகிறார்கள் ? பாருங்கள் என்பதை கையால் சொடக்கு போட்டு மிரட்டல் விட்டதை பார்த்தோம் .

பாராளுமன்றம் நடக்கும்போது பல இருக்கைகள் காலியாக விட்டு விட்டு திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பது போன்று படம் பிடித்து இங்கே அதை அவர்கள் குடும்பத்தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவது ஏதோ பெரிய சாதனைகளை நிகழ்த்தி விட்டதாக காட்டிக்கொள்வதும் ஏதோ உலக அதிசயம்போல் சித்தரிக்கப்படும் சூழலில் …

READ  தமிழச்சி தங்கபாண்டியனின் உண்மையான வயது வெளியானது?

கடந்த பாராளுமன்ற திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளில் நகைக்கடன்,கல்விக்கடன்,விவசாயக்கடன் ரத்து, நீட் தேர்வை ஒழித்துவிடுவோம், விவசாயிகளுக்கு பல ஆயிரம் மானியம் என பொய்யான வாக்குறுதிகளை சொல்லி நம்பி வாக்களித்த மக்களுக்கு உண்மை நிலையை விளக்கவேண்டியது எங்கள் கடமை…

பெரும்பான்மையான பாரத தேச மக்கள் வாக்களித்து மீண்டும் மோடி அவர்களின் அரசு அரியணை ஏற்றிருக்கும் சூழலில் துர்திர்ஷ்டவசமாக தமிழ்நாட்டில் மட்டும் பாஜக – அதிமுக கூட்டணி வெற்றி பெறாத சூழ்நிலையில் நமது மாநிலத்திற்கு மத்திய அமைச்சர் யாருமில்லையே என்பதே உண்மை நிலை.

சென்ற முறை தமிழ்நாட்டின் பிரதிநிதியாக மத்திய அமைச்சராக பங்கு பெற்றிருந்த சகோதரர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கன்னியாகுமாரி தொகுதிக்கு மட்டும் 40000 கோடிக்கும் அதிகமான மக்கள் நல திட்டங்களையும் தமிழகம் முழுவதும் பல லட்சம் கோடி மதிப்பில் சாலை பணிகள் , மருத்துவம் மற்றும் மக்கள் நலப்பணிகள் பல நடைபெற்றும் பல ஆண்டுகளாக பேசப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை,சென்னையில் மருத்துவ பூங்கா மையம் இவையெல்லாம் வழங்கியபோதும், இந்த முறை ஒரு பாஜக உறுப்பினரை கூட தேர்ந்தெடுக்க மறுத்துவிட்டார்கள் என்ற ஆதங்கம் எங்களுக்கு உண்டு.அதனால்தான் தமிழகம் இழந்ததை சுட்டிக்காட்ட வேண்டியது எங்கள் ஜனநாயக கடமை.

READ  புதுச்சேரியில் நவோதயா பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி ! இந்த பள்ளியைத்தான் வரவிடாமல் தடுக்கிறதா திமுக?

அதே வேலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அவர்கள் போல மோடி அரசுக்கு தானே வாக்களித்தீர்கள் அவரை கேளுங்கள் என்று அநாகரிகமாக பேசாமல் தமிழகம் மத்திய அரசு ஜனநாயக ரீதியாக பங்கு பெறாததால் ஆளும் அரசில் தமிழக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பங்குபெற முடியாமல் இருப்பதுதான் உண்மை நிலை என்பதை எடுத்துரைக்கவே என்னுடைய பதிவு.

கோரிக்கைகளை கொள்கை முடிவாக அளிக்கும் அதிகாரத்தை மறந்து வெறும் கோரிக்கை மனு கொடுப்பவர்களைத்தான் தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளோம்.எல்லோருக்கும் எல்லாம் வழங்குவதை ஜனநாயகம் என்று பேசுபவர்கள் கடந்த காலத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சியின் ஆட்சியின்போது தங்கள் குடும்பத்தினருக்கு மட்டுமே குறிப்பிட்ட துறைகளை டெல்லிக்கு சென்று போராடி,வாதாடி பெற்று ஆதாயம் பெற்று திகார் வரை சென்ற வரலாறு மக்களுக்கு தெரியும்.

READ  கட்சியினர் வெளியேறலாம் கட்சி தலைமை அலுவலகமும் வெளியேறுவது இதுதான் முதல் முறை அலுவலகத்தை மீட்பாரா TTV தினகரன்.

எனவே பாரதபிரதமர் மோடி அவர்களின் அரசு வாக்களித்தவர்களுக்கும்,வாக்களிக்காதவர்களுக்கும் ஜனநாயக கடமை ஆற்றும் என்பதை யாரும் சொல்லி தர தேவையில்லை ,அதனால்தான் பெரும்பான்மை மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள்.

இவ்வாறு தமிழிசை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here