நீட் தேர்வில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவியின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்ற தமிழிசை சௌந்தர்ராஜன் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில் அதில் தமிழகத்தில் 48 .57 சதவீதம் மாணவ மாணவியர் தேர்ச்சி அடைந்தனர் கடந்த ஆண்டை விட 9 சதவீதம் அதிகமான அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதிலும் குறிப்பாக சென்னை அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்த அரசு பள்ளி மாணவி ஜீவிதா நீட் தேர்வில் 605 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தையல் தொழிலாளியின் மகளான இவர் நீட் தேர்வில் தமிழக அளவில் சாதனை படைத்தது மற்ற மாணவிகளுக்கு ஒரு முன் உதாரணமாக மாறியுள்ளார்.

இந்த மாணவி ஜீவிதா எடுத்த மதிப்பெண்ணிற்கு எந்த அரசு கல்லூரியில் வேண்டுமானாலும் இடம் கிடைக்கும் ஆனால் அரசு கல்லூரிக்கு ஆகும் செலவுகளை கூட செய்ய முடியாத நிலையில் ஜீவிதாவின் பெற்றோர் உள்ளனர்.

Loading...
READ  முதல் நாளிலேயே ஆட்டத்தை ஆரம்பித்த தமிழிசை ! இதற்குத்தான் தெலுங்கானா சென்றாரா? வீடியோ இணைப்பு

இதை கேள்விப்பட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மாணவி ஜீவிதா எந்த கல்லூரியில் படிக்க விரும்பினாலும் அதற்காகும் மொத்த செலவுகளையும் தானே ஏற்பதாக கூறியுள்ளார்.

நீட் தேர்வை வைத்து அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள் மத்தியில் நன்கு படித்து மதிப்பெண்கள் எடுத்த மாணவிக்கு படிப்பு செலவு முழுவதையும் ஏற்கும் தமிழிசையின் இந்த செயல் மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here