முதல் நாளிலேயே ஆட்டத்தை ஆரம்பித்த தமிழிசை ! இதற்குத்தான் தெலுங்கானா சென்றாரா? வீடியோ இணைப்பு

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

தமிழக பாஜக தலைவராக 5 ஆண்டுகள் பதவி வகித்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட போது, அன்றே அவரது அரசியல் வாழ்க்கை முடிவிற்கு வந்ததாக பலர் பேசி வந்தனர், இந்நிலையில் தெலுங்கான ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டதன் பின்னணி வெளியாகியுள்ளது.

சொந்த மாநிலங்களில் அரசியலில் ஜொலிக்க முடியாத சிலர் வேறு மாநிலங்களில் கவர்னர்களாகி பதவிக்கு வந்த பிறகு அந்த மாநில அரசியலில் தலையிட்டு ஆளும் கட்சியிடையே உண்டாகும் மோதலினால் சிறந்த
கவர்னராக மக்களினால் போற்றப்படுவது
உண்டு.

இன்றைக்கு தமிழகத்திலேயே எத்தனையோ
கவர்னர்கள் இருந்தாலும் 1993 -1996 வரை
தமிழக கவர்னராக இருந்த சென்னாரெட்டியையே அனைவரும் ஒரு ஆளுமையான
ஆளுனராக ஏற்று கொள்வோம். அந்த அளவிற்கு அப்பொழுது ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவுக்கும் சென்னாரெட்டிக்கும் இடையே
நடைபெற்ற மோதல்களை நாம் அறிவோம்.

1996 ல் தமிழகத்தில் ஜெயலலிதா தோல்வி
அடைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்த வர்கவர்னர் சென்னாரெட்டி தான்.இருவருக்கும் இடையில் நடைபெற்ற மோதலினால் தான் ஜெயலலிதாவின் மீது வழக்கு தொடர கவர்னர் சென்னாரெட்டி அனு மதி அளிக்க வைத்து ஜெயலலிதாவின்
அரசியல் வாழ்க்கையையே மாற்ற வைத்தது.

Loading...

தெலுங்கானா கவர்னர் தமிழிசை அவர்களும்
ஆந்திராவில் இருந்து வந்து தமிழக அரசியலை கலக்கிய சென்னாரெட்டி மாதிரி தமிழகத்தில் இருந்து தெலுங்கானா கவர்னராக
நுழைந்து தெலுங்கானா அரசியலை கலக்க
போகிறார்.இதற்கான பிள்ளையார் சுழியை ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியே ஆரம்பித்து வைத்து இருக்கிறது.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவின்
செய்தி தொடர்பாளர் வனம் ஜ்வாலா நரசிம்ம ராவ் என்பவர் “Gubernatorial gimmicks of modern times” அதாவது ஆட்சிக்குரிய நவீன
காலத்து வித்தைகள் என்கிற பெயரில்
கவர்னராக தமிழிசை நியமிக்கப்பட்டது பற்றி
தெலுங்கானாவில் வெளியாகும் ஒரு ஆங்கில நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதி
இருக்கிறார்.

இதில் சர்க்காரியா கமிசன் அறிக்கைப்படி மாநில கவர்னர்கள் அரசியல் கட்சி சார்பாக
இருக்க கூடாது என்பதையும் மாநில கவர்னர்
நியமனம் என்பது அந்த மாநில முதல்வரிடம்
ஆலோசிக்கப்பட்ட பிறகே மேற்கொள்ளப்பட
வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது என்பதை முன் வைத்து எழுதிய கட்டுரை இப்பொழுது தெலுங்கானா அரசியலில் தீப்பிடிக்க ஆரம்பித்து உள்ளது.

READ  நீட் தேர்வில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவியின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்ற தமிழிசை சௌந்தர்ராஜன் !

அதெப்படி கவர்னர் நியமனம் பற்றி முதல்வரின் செய்தி தொடர்பாளர் விமர்சிக்கலாம் என் று கவர்னர் தமிழிசைக்காக தெலுங்கானா
மாநில பிஜேபியினர் தெலுங்கானா ராஷ்டிரியசமிதி கட்சியினருடன் வரிந்து கட்டிக்கொண்டு மல்லுக்கு நிற்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஆக தமிழிசை கவர்னராக வந்தவுடனே இது
வரை தெலுங்கானா அரசியலில் இணைந்து இருந்த பிஜேபியும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும் வெளிப்படையாக மோத ஆரம்பித்து விட்டார்கள்.இப்பொழுது இரு கட்சியினரிடையே ஆரம்பித்துள்ள மோதல் போகப்போக கவர்னர் முதல்வர் மோதல் என்கிற அளவில்
சென்று விடும்.

இதுவரை தெலுங்கானா கவர் னராக இருந்த நரசிம்மன் அவர்களுக்கும்தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும் இடையில் நல்ல நட்பு இருந்தது. அதனாலேநரசிம்மன் கடந்த 10 வருடங்களாக ஆந்திராமற்றும் தெலுங்கானா கவர்னராக காலம்தள்ளிவிட்டார்.

தெலுங்கானா மாநிலம் உதயமான நாளில் இருந்து தமிழிசை கவர்னராக பதவி ஏற்கும் வரை தெலுங்கானா கவர்னராக இருந்த நரசிம்மன் அவர்கள் ஒரு முன்னாள் இன்டலிஜென்ஸ் பீரோ டைரக்டர்.காங்கிரஸ் கட்சியின் செல்ல பிள்ளையான இவரும் தமிழகத்தை சேர்ந்தவர் தான் இவர் முதலில் சட்டிஸ்கர் மாநில கவர்னராக இருந்தவர்.

ஆனால் 2009 ல் ஒன்று பட்ட ஆந்திர மாநில
நிலத்தில் ராஜசேகர ரெட்டி மறைவுக்கு பிறகு நிலவிய குழப்பத்தை சரிகட்ட காங்கிரஸ் அரசு இவரை ஆந்திராவுக்கு அனுப்பி வைத்தது.இவரும் காங்கிரஸ் கட்சியில் நிலவிய
கோஷ்டி பூசல்களை அடக்கி 2014 வரை ஆந் திராவில் காங்கிரஸ் ஆட்சியை காப்பாற்றியவர்.அதற்கு பிறகும் மத்திய அரசு நரசிம்மனையே ஆந்திரா தெலுங்கானா இரண்டு மாநிலங்களிலும் கவர்னராக தொடர வைத்தது.

ஆனால் இப்பொழுது தமிழிசை சௌந்திரராஜன் அவர்களை தெலுங்கானா மாநில கவர்னராக மத்திய அரசு நியமித்ததும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சர்க்காரியா
கமிசன் தெரியுமா? பர்க்காரியா கமிசன் தெரி
யுமா? என்றெல்லாம் கத்த ஆரம்பித்து விட்டது.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால்
இதுவரை நரசிம்மன் கவர்னராக இருந்த
வரை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியில்
எந்த ஒரு குழப்பத்தையும் பிஜேபியினால்
உருவாக்க முடியவில்லை. எந்த ஒரு எம்எல்ஏவும் பிஜேபி பக்கமாக ஒடி வரவில்லை நாடு முழுவதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி
மாறி பிஜேபி பக்கமாக வந்தார்கள்.

READ  BREAKING கேரளாவில் பஞ்சாயத்து தலைவர் பதவியை கைப்பற்றியது அதிமுக !

ஆனால் தெலுங்கானா மட்டும் காங்கிரஸ் உடைந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியில் சேர்ந்தார்கள்.இப்பொழுது தெலுங்கானா அரசியலில் அதிசயம் ஆரம்பித்து உள்ளது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியில் இருந்தே பிஜேபிக்கு எம்எல்ஏக்கள் வர தயாராகி கொண்டு இருக்கிறார்கள்.

அனேகமாக இதற்கு பிள்ளையார் சுழியை
போட இருப்பவர் மைனாம்பள்ளி ஹனுமந்த்
ராவ் தான். முன்னாள் தெலுங்கு தேசம் எம்எல்ஏவான ஹனுமந்த்ராவ் இப்பொழுது மல்கஜ்கிரி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.


நீண்ட நாட்களாக அமைச்சர் பதவியை எதிர்
பார்த்து இருந்த ஹனுமந்த்ராவ்க்கு சந்திர
சேகரராவ் இப்பொழுது நடைபெற்ற அமைச்ச ரவை மாற்றத்திலும் அல்வா கொடுத்து விட்ட
தால் ஹனுமந்த்ராவ் பிஜேபிக்கு வர தயாராக
இருக்கிறார்.

அது மட்டுமல்லாது ஆந்திர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் அமைச்சராக இருந்து தெலுங்கானா பகுதியின் காங்கிரஸ் அடையாளமாக இருந்த ஜனார்த்தன் ரெட்டியின் மகன்விஷ்ணு வர்த்தன் ரெட்டி என்று மிகப்பெரிய அளவில் பிஜேபிக்கு வர இருக்கிறார்கள்.

தென்னிந்தியாவில் கர்நாடகாவை அடுத்து
பிஜேபி ஆட்சியை பிடிக்க அதிக வாய்ப்புகள்
உள்ள மாநிலம் தெலுங்கானா தான். இந்த
லோக்சபா தேர்தலில் 4 எம்பிக்களை தெலுங்கானா மாநிலம் பிஜேபிக்கு அளித்து இருக்கிறது.அதனால் தெலுங்கானாவை குறிவைத்து பிஜேபி வேலை செய்கிறது.

இதற்கு துணையாக இருக்கவே தமிழிசை
அவர்களை தெலுங்கானா கவர்னராக மத்திய
அரசு கொண்டு வந்துள்ளது. தெலுங்கானாவில் கவர்னர் தமிழிசையின் அடையாளம்
எது தெரியுமா? தமிழக காங்கிரஸ் தலைவரின் மகள் என்றே பார்க்கப்படுகிறார்.

கடந்த ஜூன் மாதம்காங்கிரஸ் கட்சியில் இருந்து 12 எம்எல்ஏக்கள் தெலுங்கானா ராஷ்டி ரிய சமிதிக்கு இடம் பெயர்ந்ததை தெலுங்கானா பிஜேபி யும் சரி தெலுங்கானா கவர்னரும்
கண்டு கொள்ளவில்லை. அப்பொழுது அது
தடுக்கப் பட்டு பிஜேபி பக்கமாக வரவைக்கப்
பட்டு இருந்தால் இப்பொழுது பிஜேபிதான்
தெலுங்கானாவில் எதிர்கட்சியாக இருக்கும்.

READ  வெளியானது அதிகாரபூர்வ தகவல் அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு செல்லும் முதல் எம் பி யார் தெரியுமா?

அப்பொழுதே தெலுங்கானாவில் கவர்னரை
மாற்றி அரசியல் சார்புடைய வரை நியமித்து
தெலுங்கானா அரசியலை குழப்ப வேண்டும்
என்று அமித்ஷா நினைத்து விட்டார். இதற்கு
அவர் தேடிய அரசியல் வாதி தான் தமிழிசை
சௌந்திரராஜன்.பிஜேபியை விட தெலுங்கானாவில் செல்வாக்கு உள்ள காங்கிரசை காலி
செய்ய காங்கிரஸ் பின் புலம் உள்ள பிஜேபியை சேரந்தவர் என்கிற தகுதியினால்தான்
தமிழிசை அவர்கள் தெலுங்கானா மாநில
கவர்னராக நியமிக்கப்பட்டார்.

இனி வரும் காலங்களில் தெலுங்கானாவில்
உள்ள காங்கிரஸ் மொத்த மாக காலியாகி
பிஜேபிக்கு வந்து தெலுங்கானா வில் பிஜேபி
எதிர்கட்சியாக அமர்ந்து விடும். அதற்கு பிறகு
நிர்வாக ரீதியாக முதல்வர் சந்திரசேகரராவு க்கும் கவர்னர் தமிழிசைக்கும் இடையில்
ஆரம்பமாகும் மோதலினால் தெலுங்கானா
அரசியல் திசைமாற ஆரம்பிக்கும்.கவர்னர்
மாற்றமே சில மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தை அளித்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த தமிழிசை சௌ ந்திர ராஜன் அவர்கள் தெலுங்கானா கவர்னராக
நியமிக்கப்பட்ட பிறகே தெலுங்கானாவின்
சக்கரவர்த்தியாக இருந்த சந்திரசேகரராவி ன் வீழ்ச்சி ஆரம்பமாகி அங்கு பிஜேபியின்
ஆட்சி மலர வழிவகுத்தது என்று நாளைய தெலுங்கானா அரசியல் வரலாறு எழுதி
வைக்கும்.

இதற்கிடையில் புதிதாக அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த போதே தான் வழக்கமான அமைதியாக இருக்கப்போகும் ஆளுநர் அல்ல என்பதை முதல்வர் சந்திரசேகரராவிற்கு நேரடியாக நேரடியாக தனது முதல் உரையில் தெளிவு படுத்திவிட்டார் தமிழிசை –

எனவே கவர்னராக தனக்கு கொடுக்கபட்ட அசைன்மென்டை வெற்றிகரமாக தமிழிசை முடிப்பார் என்றே அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.

Credit -திரு. விஜயகுமார்

………………………………….
©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here