தமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

தமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் !

சென்னையின் அடையாளங்களில் முக்கியமான இடம் என்று சொன்னால் அதில் மீனம்பாக்கமும் ஒன்று அதற்கு காரணம் அங்கு அமைந்துள்ள விமான நிலையம்தான் தற்போது சென்னை விமானம் நிலையத்தை ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் பயன்படுத்தி கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விமானநிலைய பயன்பாடு அதிகரிப்பதை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய விமான போக்குவரத்து ஆணையம் முடிவு செய்துள்ளது, அதன்படி தற்போது சென்னையில் விமான நிலையம் அமைக்க 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் தேவைப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.இப்புதிய விமான நிலையங்கள் அமைக்க, சென்னை அருகே உள்ள வளத்தூர், தொடூர், செய்யூர், திருப்போரூர், மதுரமங்கலம், மப்பேடு ஆகிய ஆறு இடங்கள் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளன. எனவே இதில் ஒரு இடத்தில் விரைவில் இரண்டாவது விமான நிலையம் அமைய போகிறதாம்.

READ  ₹35 கோடி GST வரி ஏய்ப்பு சிக்கினார் ஆம்பூரை சேர்ந்த பிரியாணி தொழிலதிபர் !

புதிய விமான நிலையம் அமையும் பகுதியை சுற்றி இடத்தை வாங்கி போட இப்போதே ரியல் எஸ்டேட் துறையினர் திட்டமிட்டு வருகின்றனராம் எல்லாம் சரி முதல் விமான நிலையம் அமைத்த கான்ட்ராக்டரிடம் மட்டும் இரண்டாவது விமான நிலையத்தை கொடுத்து விடாதீர்கள் அங்கும் கண்ணாடிகள் உடைந்து விழப்போகிறது என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here