தமிழக பாஜக தலைவர் மாற்றம் உறுதி ! புதிய தலைவர் யார்?

0

தமிழக பாஜக தலைவர் மாற்றம் உறுதி ! புதிய தலைவர் யார்?

சென்னை.

Loading...

பாஜக தலைமையகம் கமலாலயத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்த கூட்டம் நடைபெற்றது இதில் கேரளா பாஜக தலைவர்களில் ஒருவரான சோபா சுரேந்திரன் கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தில் பாஜக முக்கிய தலைவர்கள் தமிழிசை, பொன்னார், H ராஜா வானதி ஸ்ரீனிவாசன் பாஜக அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம், நரேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது குறித்த ஆலோசனை மாவட்ட நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து சில முக்கிய ஆலோசனை கமலாலயத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

சோபா சுரேந்திரன் கடந்த 17 – ம் தேதி பாஜக தலைவர் அமிட்ஷா அழைப்பின் பேரில் டெல்லி சென்றார் அப்போது முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகாணும் உடன் இருந்தார். அங்கு நடைபெற்ற ஆலோசனையில் புதிய தமிழக தலைவர் குறித்து தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்களின் ஆலோசனையை அறிந்து வருமாறு கூறியிருந்தார்.

READ  எங்க ஏரியாகுள் ரம்ஜானா போட்டுத்தாக்கிய ஆதிவாசிகள்
TNNEWS24

அதன் அடிப்படையிலேயே சோபா சுரேந்திரன் தமிழகம் வந்துள்ளார். கூட்டத்தில் தமிழிசை, பொன்னார் மற்றும் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோருடைய கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதில் தமிழிசை cp ராதாகிருஷ்ணன் மற்றும் pt அரசகுமார் ஆகியோரின் பெயரை சொல்லி பரிந்துரைத்துள்ளார்.

பொன்னார் -வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் கருப்பு முருகானந்தம் ஆகியோர்களின் பெயரை பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது. #24

கேசவ விநாயகத்தினை பொறுத்தவரை ஆர் எஸ் எஸ் பிரமுகர்கள் ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் என்ற கருத்தினை பரிந்துரைத்துள்ளார். இதனை கேட்டுக்கொண்ட சோபா நாளை மறுநாள் டெல்லி சென்று அமிட்ஷாவை சந்தித்து தகவல்களை தெரிவிக்க இருக்கிறார்.

இதன் பின்னணியின் பேரில் தமிழக பாஜக தலைவர் மாற்றம் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் இருக்கும் என்று தெரிகிறது. பாஜக தேசிய செயலாளர் H ராஜா, நைனார் நாகேந்திரன், ஸ்ரீனிவாசன் ஆகியோர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருபதாகவும் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

READ  கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் உயிர்களுக்கு 10 லட்சம், இந்துக்கள் உயிர்களுக்கு 1 லட்சம். பணத்தை கொள்ளை அடித்துவிட்டு பிச்சை போடுகிறதா தமிழக அரசு.

தற்போதைய நிலவரப்படி தமிழக பாஜக தலைவராக வானதி அல்லது பேராசிரியர் ஸ்ரீனிவாசன் ஆகியோர்களின் பெயர்களே முன்னிலை வகிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் இலவசமாக பெற உங்களது whatsapp எண்ணில் இருந்து ACT FREE என்று 9962862140 என்ற எண்ணிற்கு வாட்சாப் செய்யவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here