தமிழக பாஜகவில் தொடங்கியது அதிரடி களத்தில் இறங்கியது அமிட்ஷா படை.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

தமிழக பாஜகவில் தொடங்கியது அதிரடி களத்தில் இறங்கியது அமிட்ஷா படை.

சென்னை.,

இனி தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா அரசியலில் அதிரடி மாற்றங்களை காணலாம் என்று இப்போதே தமிழகத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள் மெல்ல பேச தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு காரணமாக பார்க்கப்படுவது தமிழக பாஜக தலைவர் தமிழிசை நேற்று வெளியிட்ட அறிவிப்பு.

தமிழக பாஜக சார்பில் இனி யாரும் ஊடக விவாதங்களில் பங்கு பெறமாட்டார்கள் என்ற அறிவிப்பினை நேற்று வெளியிட்டிருந்தார் தமிழிசை. இந்த அறிவிப்பிற்கு தமிழக பாஜக தொண்டர்கள் இடையே வரவேற்பு காணப்பட்டது, பலரும் இந்த முடிவினை வரவேற்பதாக சமூகவலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Loading...

ஆனால் தமிழிசையின் இந்த அறிவிப்பிற்கு பின்னால் அமிட்ஷாவின் உத்தரவு இருந்ததாக கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என்று தமிழக பாஜக சார்பில் டெல்லியில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழக ஊடகங்கள் தொடர்ந்து பாஜகவினை தமிழக மக்களின் விரோதியாக சித்தரித்ததாகவும், இதனால் பலரும் பாஜகவினை தமிழர் விரோத கட்சி என்று எண்ணும் அளவிற்கு சென்று விட்டதாகவும், மத்திய அரசு சார்பில் தமிழகத்தில் செய்யப்படும் நலத்திட்டங்கள் கூட திரித்து வெளியிட்டு ஊடகங்கள் வெறுப்பினை ஏற்படுத்துவதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

READ  பாஜகவில் அதிகார பூர்வமாக இணைகிறார் தோனி தந்தி டிவி யின் கணிப்பு உண்மையாகிறது.

இதனை கவனித்த பாஜக தலைவர் அமிட்ஷா தமிழக பாஜக தலைவர்கள் யாரும் இனி ஊடக விவாதங்கள், சிறப்பு பட்டிமன்றம் போன்றவற்றில் கலந்து கொள்ளவேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார். அத்துடன் எதிர்க்கட்சிகளின் குற்ற சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக சிறப்பாக செயல்படும் சமூக ஆர்வலர்கள், அரசியல் விமர்ச்சகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை கொண்டு அவர்களுக்கு பதிலடி கொடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார் அமிட்ஷா. இதில் தமிழகத்தை சேர்ந்த சில முன்னணி பத்திரிகையாளர்கள் இடம்பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

தற்போது தமிழக ஊடகங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல அவிப்பிராயம் இல்லை என்றும் பெரும்பாலான மக்கள் ஊடகங்களின் நம்பிக்கையை மக்கள் சந்தேகிக்கின்றனர் என்றும் அதனால் தான் ட்விட்டரில் ஊடகங்களை கடுமையாக விமர்சனம் செய்வதாகவும் சுட்டி காட்டப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்துதான் பல அதிரடி முடிவுகளை இனி பாஜக எடுக்கப்போகிறது எவ்வாறு மேற்கு வங்கத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக இருந்த ஊடகங்கள் மக்கள் மத்தியில் தற்போது அவரது ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சனம் செய்கிறதோ அதே நிலைமை தமிழகத்திலும் உருவாகும் என்று சொல்லி இருக்கிறார்.

READ  மூன்று நாடுகள் பங்கேற்கும் கடற்படை ஒத்திகை தொடங்கியது !

இதன் அடிப்படையில் பார்த்தால் அமிட்ஷாவின் நேரடி டார்கெட் ஊடகங்கள்தான் என்று கூறப்படுகிறது. இனி ஊடகங்களை வலதுசாரி அரசியல் விமர்சகர்கள் மூலம் கையாளவும், ஒழுங்காக செயல்படாத தமிழக உயர் பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகளை மாற்றவும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.

பிரதமர் ஐ ஐ டி விழாவிற்கு தமிழகம் வந்து சென்ற பிறகு இதுகுறித்து முழுமையான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதுவரை மேலிட பொறுப்பாளர்கள் மூலம் தமிழக அரசியலை கவனித்து வந்த அமிட்ஷா தனக்கு வேண்டிய சகாக்கள் மூலம் நேரடியாக தமிழக அரசியலில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டாராம்.

ஊடக குழுக்களில் பானுகோம்ஸ் போன்றவர்களும் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனி ஊடகங்களின் முதலாளிகள் நிலைமை?

செ. உதயகுமார்
TNNEWS24

READ  வாங்க மேடம் நலமா இரண்டே கேள்விகளில் தெறிக்க விட்ட அமிட்ஷா? வெளியில் வந்து மமதா சொன்னது என்ன?

எங்களது செய்திகளை உங்களது வாட்சாப் எண்ணில் உடனுக்குடன் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here