63 பேர் உடல் சிதறி பலி…திருமண விழாவில் தற்கொலைபடை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து கொண்டிருக்கிறது. ஆப்கான் அரசை எதிர்த்து தாலிபான் தீவிரவாதிகள் கடுமையாக போர் தொடுத்து வருகின்றனர். அதனை தடுக்க அமெரிக்க படை அங்கு முகாமிட்டுள்ளது.இந்த உள்நாட்டு போரில் அதிகமாக உயிரிழப்பது அந்நாட்டு அப்பாவி மக்கள்தான். இது சர்வதேச அளவில் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இதனை தடுக்க ஆப்கான் அரசும்,அமெரிக்க படையும் முயற்சி செய்து வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, ஆப்கானிஸ்தானில் ஐஸ் பயங்கரவாதிகளும் காலூன்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.சியா பிரிவை சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் சன்னி பிரிவை சேர்ந்தவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் ஆப்கான் தலைநகர் காபூலில் சன்னி பிரிவினர் அதிகமாக இருக்கும் பகுதிகளில் உள்ள ஷர்.இ.துய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் அங்கு நடந்த திருமண மண்டபத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

நூற்றுக்கணக்கான விருந்தினர் கலந்துகொண்ட அந்த திருமணத்தில் திடிரென்று குண்டு வெடித்தது. சிறுவர்கள்,பெரியவர்கள் என்று எல்லோரும் விருந்து சாப்பிட்டு,இசைக்கச்சேரி கேட்டுக்கொண்டு சந்தோஷமாய் இருந்த நேரத்தில் , அந்த குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது.இந்த குண்டு வெடிப்பில் சிக்கி பலர் உடல் சிதறி பலியானார்கள். எங்கு பார்த்தாலும் மனித உடல்கள் சிதறி ரத்த வெள்ளமாக காணப்பட்டது.

READ  அங்கே அடித்தால் இங்கே வலிக்கிறது , என்ஐஏ அமைப்பிற்கு எதிராக களமிறங்கிய பல இஸ்லாமிய அமைப்புகள்.

இந்த தாக்குதல் குறித்து ஆப்கான் உள்துறை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது மனித வெடிகுண்டு தாக்குதல் என தெரிவித்தார், இந்த தாக்குதலில் 63 பேர் இறந்துள்ளனாக தெரிவித்தார். மேலும் 180 பேருக்கு மேல் படுகாயமடைந்து மருத்துவமணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதல் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக மணமகன் உயிர் தப்பினார். இத்தையக தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனர் தெரிவித்துள்ளனர்.

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here