ஓபிஎஸ்ஸை பகைத்துக்கொண்டு அரசியல் செய்யமுடியாது திமுக பக்கம் கரை ஒதுங்கிய தங்க தமிழ்செல்வன்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

தங்க தமிழ்ச்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமமுகவில் இருந்து விலகிய தங்க தமிழ்செல்வன், முதலில் அதிமுகவில் இணைய போவதாக தகவல் வெளியாகின. அதே வேளையில், தங்க தமிழ்செல்வனை அ.தி.மு.க வில் இணைத்துக் கொள்ளக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இந்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக, நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாகவும், அதற்காக 1,500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தங்கத்தமிழ்செல்வன் தரப்பினர் கூறியதாவது அரசியலில் ஆரம்பம் முதல் பன்னீர்செல்வத்தை எதிர்த்தே அரசியல் செய்துவந்தனர் தங்கத்தமிழ்செல்வன். அதனால்தான் பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுகவில் இருக்க விருப்பமில்லாமல் தினகரன் பக்கம் சென்றார். தற்போது அமமுகவில் இருந்து விலகிய நிலையில் அதிமுகவில் சேர்த்து எடப்பாடி அணியில் இணைய சம்மதம் தெரிவித்தார்.

READ  மலேசியாவில் சிறப்பான சம்பவம் செய்த இந்தியர்கள் சாகிர் நாயிக் கதை முடிந்தது.

ஆனால் எடப்பாடியோ பன்னீர்செல்வத்தை பகைத்துக்கொண்டு உங்களை கட்சியில் சேர்க்கமுடியாது வேண்டுமென்றால் அவரிடமே கேட்டு பாருங்கள் என்று கூறிவிட்டனர் இந்த சூழலில் இனி தேனியில் பன்னீர்செல்வத்தை பகைத்துக்கொண்டு அரசியல் செய்ய முடியாது என்று தீர்மானித்தவர் வேறுவழியின்றி தற்போது திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.

Loading...

இதன் மூலம் கட்சி தற்போது ஓபிஎஸ் வசமே இருப்பதாக அதிமுகவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

©TNNEWS24

எங்களது செய்திகளை உங்களது வாட்சாப் எண்ணில் உடனுக்குடன் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here