திருப்பதி செல்வோர் ஜாக்கிரதை. இந்த பொருட்களை எடுத்து சென்றால் அடி நிச்சயம்.

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருமண நிகழ்ச்சியை நடத்த காஞ்சிபுரம் மாவட்டம் மலையானுரை சேர்ந்த 40 பேர் கார் மற்றும் வேனில் திருப்பதி சென்றுள்ளனர்.

அப்போது திருப்பதி அருகே உள்ள அலிபிரி சோதனை சாவடியில் அவர்களை ஆந்திர காவல் துறையினர் சோதனை செய்தனர்.

அதில் கன்னியப்பன் என்ற ஒருவர் பீடி கட்டு ஒன்றை வைத்துள்ளார், உடனே அதனை வாங்கி காவல் துறையினர் அதை குப்பை தொட்டியில் வீசினர்.

அதை பார்த்த கன்னியப்பன் அத குப்பைதொட்டியில் இருந்து மீண்டும் எடுக்க முயன்றுள்ளார் அதை தடுக்க காவல்துறையினர் முயன்றபோது

இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, பின்னர் அது கைகலப்பாக மாறியது அப்போது ஆந்திரா காவல் துறையினர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

READ  புகைப்படத்தில் இருப்பவர் ஸ்டாலின் பேரன். சபரீசன் மகனா? உடலில் அணிந்திருக்கும் நகைகள் மதிப்பு என்ன தெரியுமா?

அதில் கன்னியப்பன் , டெல்லிபாபு , சந்திரா என்ற பெண் உள்பட 3 நபர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது திருமணத்திற்காக சந்தோசமாக சென்ற நிலையில் இந்த சம்பவம் நீங்கா வடுவாக மாறியுள்ளது.

எனவே தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்கள் புகை பொருட்கள், மது , புகையிலை உள்ளிட்ட எந்த வித போதை பொருட்களையும் எடுத்துச்செல்ல கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

மீறி எடுத்து செல்வோர் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள் என்றும் ஆந்திர காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here