ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி சொல்லிய செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாகிறது !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி வழியாக கிடைக்கபெற்ற உண்மை கதை !!

சமூகவலைத்தளம்.,

சமூகவலைத்தளத்தில் இந்திய இராணுவ செய்திகள் வெளியிட்ட பதிவு ஒன்று பலராலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது, பலரும் இராணுவத்தினரின் சேவையை எண்ணி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். அந்த தகவல் இன்றைய சமூகவலைத்தள செய்திகளுக்காக :-

காஷ்மீர் பகுதியில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் “க்வாஜா பாக்” பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் ஒரு ராணுவ வீரர் நுழைகிறார். நூறு ருபாய் பணத்தை எடுத்து தனது பணப்பையின் உள்ளே வைக்கிறார்.

Loading...

அடுத்த நாளும் செல்கிறார் முந்தைய நாளை போலவே நூறு ருபாய் பணம் எடுக்கிறார் செல்கிறார். இது பல நாட்களாக தொடர்ந்தது.

READ  முகிலன் ஒரு பொம்பளை பொருக்கி செருப்புதான் வரும் ஆதரவாளர்களை வெளுத்து வாங்கும் கவிஞர் தாமரை !

இதனை ஏடிஎம் மையத்தின் காவலாளி கவனிக்கிறார் இருந்தாலும் “தனக்குள் ராணுவத்தை பற்றி விதைக்கப்பட்ட பொய்களால்” ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக ராணுவ வீரரிடம் கேட்காமல் ஒதுங்கி விட்டார்.

பல நாட்களாக இது தொடர்ந்து வந்த நிலையில் ஒரு நாள் ஏடிஎம் மையத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கவே ராணுவ வீரர் தன் மீது கோபபட்டால் கூட சுற்றி இருப்பவர்கள் தன்னை காப்பாற்றி விடுவார்கள் என நினைத்து அந்த தைரியத்தில் ராணுவ வீரரிடம் ” சார், நீங்கள் தினமும் ஏன் நூறு ரூபாய் மட்டும் எடுத்து செல்கிறீர்கள் ?? ஒரு பெரிய தொகையை எடுத்தால் பல வாரங்கள் பயனாக இருக்குமே இப்படி தினமும் ஏன் உங்களை வருத்தி கொள்கிறீர்கள் ?? ” எனக் கேட்டார்.

அதே சமயம் களைப்புடன் இருந்த ராணுவ வீரர் சுற்றி இருந்த கூட்டத்தை ஒரு நிமிடம் பார்த்தார் காரணம் யாரையும் நம்ப முடியாது கையில் ஆயுதம் இல்லை எது வேண்டுமானாலும் நடக்கலாம், என்ற சிந்தனையில் இருந்த அவர் ஏடிஎம் மையத்திலிருந்து வெளியேறும் முன் தனது நெற்றியை தடவிக்கொண்டே காவலாளியை நோக்கி ” சார் எனது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள செல்பேசி எண்ணை வீட்டில் இருக்கும் எனது மனைவி உபயோகிக்கிறார், ஒவ்வொரு நாளும் நான் இங்கு பணம் எடுக்கையில் அது பற்றிய தகவல் குறுஞ்செய்தியாக எனது மனைவியின் செல்பேசிக்கு சென்று விடும் இங்ஙனம் தான் அவளது கணவன் உயிரோடு இருக்கிறான் என்பதை அறிந்து சிறிது மனநிம்மதியுடன் தினமும் இரவு உறங்க செல்கிறாள்” என கூறிவிட்டு நடையை கட்டினார் !!

READ  அடுத்த இரண்டு நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது

இந்த வலியை ஒவ்வொரு ராணுவ மற்றும் துணை ராணுவ வீரர்களின் குடும்பத்தினரால் மட்டுமே புரிந்து கொள்ள இயலும்.

வெறுமனே வீரர்களுக்கு மட்டுமல்ல அவர்களின் குடும்பங்களுக்கும் இத்தேசம் கடமைபட்டுள்ளது !!.

திருமுருகன் காந்தி போன்றோர் இப்படி சுதந்திரமாக வாழும் சுதந்திர நாட்டில் இருந்து கொண்டு அந்த நாட்டையே பொருக்கி தேசம் என விமர்ச்சிப்பதை எந்த இந்தியனும் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்றும் இவர்களை போன்றவர்கள் இனியாவது திருந்த வேண்டும் என்று சமூகவலைத்தளங்களில் உணர்ச்சி பெருக்குடன் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here