#24INFO கர்நாடகாவில் ஆளுநர் ஆட்சி? மத்திய அரசு அமல்படுத்த காரணம் இதுதான் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

கர்நாடகாவில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், முதலமைச்சராக இருந்த ம.ஜ.த குமாரசாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டுவந்தார் . 6 நாட்கள் நீடித்த விவாதத்துக்குப் பிறகு, நம்பிக்கை வாக் கெடுப்பு நடத்தப்பட்டதில் குமாரசாமி அரசு 99 வாக்குகளே பெற்றது மாறாக அரசிற்கு எதிராக 105 வாக்குகள் பெற்று கர்நாடக அரசு கவிழ்ந்தது.

இதையடுத்து, 105 எம் எல் ஏ – களை வைத்துள்ள பாரதிய ஜனதா ஆட்சியமைக்க உரிமை கோரும் எனத் தகவல் ஊடகங்களில் வெளியானது. ஆனால், அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதியிழப்பு செய்வதா, ராஜினாமாவை ஏற்பதா என்பதில் சபாநாயகர் ரமேஷ் குமார் இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

READ  அதான் 370 வது பிரிவை நீக்கிவிட்டீர்களே, இன்னும் எதற்கு எங்களை வீட்டுச்சிறையில் அடைத்துள்ளீர்கள்..மெகபூபாவின் மகள் வேதனை.

அவர் முடிவை தாமதப்படுத்துவதால் ஆட்சி அமைக்க இயலாத சூழலில் தற்போதைய பாஜக உள்ளது. ஏனெனில், சபாநாயகர் முடிவெடுக்காதபோது அரசு அமைத்தால், நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அவைக்கு வரும்பட்சத்தில் அவர்கள் எதிர்த்து வாக்களித்தால் பாஜக அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்படலாம். இதனால், ஆட்சி அமைக்க அக்கட்சி அவசரம் காட்டவில்லை என தெரிந்தது

Loading...

தற்போதைய சூழலில் , கர்நாடகாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. சட்டப்பேரவையை முடக்கி வைத்து சிறிது காலம் ஆளுநரின் நிர்வாகத்தின் கீழ் இருக்கக்கூடும் எனத் தெரிகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் சபாநாயகர் முடிவு செல்லுபடியாகாத காரணத்தால் பாஜக இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

READ  பா.சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறைக்குள் கடும் போட்டி...செய்வாய் கிழமை முதல் அமலாக்கத்துறை கஸ்டடியில் பா.சிதம்பரம்

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here