உத்திரபிரதேசத்தில் இனி பரிசு பொருள்களுக்கு அனுமதியில்லை அதிரடி அறிவிப்பினை வெளியிட்டார் யோகி !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

உத்தரப்பிரதேசத்தில் அரசு அதிகாரிகள் அரசின் அனுமதியின்றி பரிசுகளை பெறக் கூடாது என்று புதிய உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. 

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அம்மாநிலத்தில் அரசு அதிகாரிகளுக்கு பல அதிரடி கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். முதலில் அரசு கூட்டத்தின் போது கைப்பேசியை உபயோகிக்க கூடாது என்று அறிவுறுத்தியிருந்தார். அத்துடன் அவர்கள் அனைவரும் காலை 9 மணிக்கு கண்டிப்பாக அலுவலகத்திற்கு வரவேண்டும் என்ற ஆணையை பிறப்பித்திருந்தார். 

இந்நிலையில் மற்றொரு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளார். இது தொடர்பாக அம்மாநில தலைமைச் செயலாளர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், “இனிமேல் பொதுமக்கள் யாரும் சட்டப்பேரவை வளாகம் மற்றும் பிற அரசு கட்டடங்களில் பரிசுகளுடன் நுழைய கூடாது. மேலும் அரசு அதிகாரிகள் அரசின் அனுமதியின்றி பரிசுகளை வாங்கக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Loading...
READ  இலங்கை குண்டுவெடிப்பு ராமலிங்கம் படுகொலை இஸ்லாமியர்களை கடுமையாக எச்சரித்த கல்யாணராமன் !

அத்துடன் அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் குட்கா மற்றும் பான் மசாலா ஆகியவை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி பயன்படுத்துபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அலுவலகங்களுக்குள் துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் யாரும் நுழைய கூடாது என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. ஏனென்றால் சில எம்.எல்.ஏக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் துப்பாகி ஏந்திய பாதுகாப்பு நபர்களுடன் அரசு அலுவலகத்திற்குள் வருவதாக புகார் எழுந்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெரும் நடவடிக்கைகள் வெகுவாக குறையும் என்றும், VIP கலாச்சாரம் ஒழியும் என்றும் யோகி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

யோகி முதல்வராக பதவியேற்றது முதல் அரசு அதிகாரிகளை முதலில் சீர் செய்யும் நடைமுறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

READ  ஓபிஎஸ்ஸை பகைத்துக்கொண்டு அரசியல் செய்யமுடியாது திமுக பக்கம் கரை ஒதுங்கிய தங்க தமிழ்செல்வன்

©TNNEWS24

எங்களது செய்திகளை உங்களது வாட்சாப் எண்ணில் உடனுக்குடன் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here