உலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி, நேற்று அமெரிகாவில் கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியில் உலகின் தலைசிறந்த வீரர்களான நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இரண்டாம் நிலை வீரரான ரபேல் நடால், மூன்றாம் நிலை வீரரான ரோஜர் பெடரர் உள்ளிட்ட அபாயகரமான வீரர்கள் மோத உள்ளனர்.

நேற்று நடந்த முதல் சுற்றில், ஜோகோவிச், 22 ஆம் நிலை வீரரான பேனாவை சந்தித்தார், இந்த ஆட்டதில் 6-4 6-1 6-4 என்ற நேர் செட்டில் ஜோகோவிச் எளிதில் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ரோஜர் பெடரர் இந்திய வீரரான கோவலை 4-6 6-1 6-3 6-4 என்ற செட் கனக்கில் வென்றார். 16 நாட்கள் நடக்ககூடிய இந்த ஆட்டத்தை பார்க்க பல நாடுகளில் இருந்து மக்கள் அமெரிக்கா சென்றுள்ளனர்.

READ  இனி யாரும் வெளிநாடுகளிலிருந்து தங்கம், போதை பொருட்கள் கடத்த முடியாது...மத்திய அரசின் அதிரடி திட்டம்.

இதுவரை அதிக கிராண்ட்ஸ்லாம் பெற்று ரோஜர் பெடரர் (20) முன்னிலையில் இருக்கிறார். அடுத்ததாக ரபேல் நடால்( 18) , மற்றும் நோவக் ஜோகோவிச் (16) அடுத்த அடுத்த இடத்தில் இருக்கிறனர். இந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் தான் வெற்றி பெருவார் என்று வள்ளுனர்கள் தெரிவித்துள்ளனர். அவர் இந்த ஆண்டில் ஆஸ்திரேலியன் ஓபன், மற்றும் விம்பிள்டன் ஆகிய இரு கிராண்ட்ஸ்லாமிலும் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here