வடிவேலு இனி எந்த படங்களிலும் நடிக்க முடியாது….தயாரிப்பாளர் சங்கம் அதிரடி

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

பொதுவாக வருடத்திற்கு 7, 8 படங்களில் நடித்து வந்த வைகை புயல் வடிவேலு, கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. கடைசியாக மெர்சல், சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகமான இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் வடிவேலு நடிக்க இருந்தார். ஆனால் இந்த படம் சில சர்ச்சையால் தடைபட்டுபோனது. இந்த படத்தை சங்கர் தயாரித்து, சிம்புதேவன் இயக்கத்தில் உருவாக இருந்தது. பல கோடி ரூபாய் சிலவில் சென்னையில் ஒரு அரண்மனை அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்தினார்கள். ஆனால் இயக்குனர் சிம்புதேவனுடன் எற்பட்ட தகறாறினால் படத்தில் நடிக்க வடிவேலு மறுத்துவிட்டார்.

இந்த காரணத்தினால் படத்தின் தயாரிப்பாளரான சங்கர் நஷ்டஈடு கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அந்த புகாரினால் எந்த ஒரு படங்களிலும் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய தடைவிதித்தனர்.

READ  சரவணா ஸ்டோர் உரிமையாளர் மனைவி யார் என்று தெரியுமா? அவருக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு !

இதுகுறித்து வடிவேலு கூறியதாவது, நான் எனது தரப்பு நியாயத்தை தயாரிப்பாளர் சங்கத்திடம் தெரிவித்துவிட்டேன், ஆனாலும் சில பேர் எனக்கு தொடர்ந்து பிரச்சனை கொடுக்கிறார்கள். இந்த விவகாரம் பற்றி நடிகர் சங்கத்திடமும் முறையிட்டேன், ஆனாலும் யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை என வடிவேலு வருத்தமாக தெரிவித்தார்.

இதயடுத்து நடிகர் சங்க குழுவை சேர்ந்தவர்களிடம் கேட்டு விசாரித்தபோது, இயக்குனர் சங்கருக்கான இழப்பீடை வடிவேலு கொடுக்கும் வரை, எந்த தயாரிப்பாளரும் வடிவேலுவை வைத்து படம் எடுக்க முன்வர மாட்டார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர். இரண்டு ஆண்டுகளாக வடிவேலு நடிக்காமல் போனதற்கு இதுவே காரணம்.

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here